சென்னையின் குடிநீர் தேவைக்காக, கிருஷ்ணா நீரை உடனடியாக திறக்கக் கோரும் தமிழக முதல்வர் பழனிசாமியின் கடிதத்தை ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியிடம் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் அளித்தனர். 
தமிழகம்

சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக 8 டிஎம்சி கிருஷ்ணா நீரை திறக்க ஆந்திர முதல்வர் உத்தரவு: முதல்வரின் மனுவை அளித்து அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை

சென்னை நகரின் குடிநீர் பற்றாக்குறை விரைவில் தீரும் வகையில் ஆந்திரா வில் இருந்து 8 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்துவிட, அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும்
ஜெயக்குமார் ஆகியோர் தெரிவித் தனர்.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை சரியாக பெய்யாத நிலையில், பெரும்பாலான பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர்.

முன்னதாக, தெலுங்கு கங்கை திட்டத்தின்கீழ், ஆண்டுக்கு 12 டிஎம்சிகிருஷ்ணா தண்ணீரை தமிழகத் துக்கு ஆந்திர மாநிலம் தர வேண்டும்.

ஆனால், எந்த ஆண்டிலும் முழுமையாக இந்த நீர் வழங்கப்படு வதில்லை. ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் இருந்து, சோமசீலா மற்றும் கண்டலேறு அணைகள் வழியாக இந்த நீர், தமிழகம் வந்து சேர வேண்டும். இத்திட்டத்துக்கான ஒப்பந்தப்படி ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தர வேண்டும். ஆனால், கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறை வாக இருப்பதைக் காரணம்காட்டி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காமல் இருந்தது. தற்போது, அங்கு மழை பெய்து வருவதால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு தேவையான நீரை பெற, முதல்வர் பழனிசாமி உத்தரவின்பேரில் தமிழக அமைச்சர் கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் டி.ஜெயக்குமார், பொதுப்பணித் துறை செயலர் ஆகியோர் ஆந்திர மாநிலம் சென்று, அம்மாநில முதல் வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து, தமிழக முதல்வர் சார்பில் மனு அளித்தனர். அப்போது தமிழகத்துக்கு உடனடியாக 8 டிஎம்சி நீரை திறந்து விடுமாறு அப்போது கோரிக்கை விடுத்தனர். பின்னர் சென்னை திரும்பிய அமைச்சர்கள் இருவரும் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறிய தாவது: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய கிருஷ்ணா நீரை பெறுவதற்காக ஆந்திர முதல்வரைச் சந்தித்து, தமிழக முதல்வர் தந்த கடிதத்தை அளித்தோம். தமிழகத்துக்கு தரவேண்டிய நீரை வழங்க ஆந்திர
முதல்வர் ஒப்புதல் அளித்தார். உடனடியாக தண்ணீர் திறந்துவிடநடவடிக்கை எடுக்க அதிகாரிக ளுக்கு உத்தரவிட்டார். இதன்முலம், சென்னையில் குடிநீர் பற்றாக்குறை வேகமாக தீர்ந்துவிடும்.

முதல்வர் சார்பாகவும் மக்கள் சார்பாகவும் ஆந்திர முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளோம். ஏற் கெனவே, 4 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும். தற்போது 4 டிஎம்சி வழங்க வேண்டும். எனவே, மொத்தம் 8 டிஎம்சி தண்ணீரையும் தர ஒப்புக்கொண்டு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே 2.79 டிஎம்சி நீர் ஸ்ரீசைலத்தில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. அங்கி ருந்து சோமசீலா, கண்டலேறு வழியாக உடனடியாக தண்ணீர் திறந்து விடப்படும் என்று உறுதியளித் துள்ளனர். இவ்வாறு தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT