தமிழகம்

தீவிரவாதிகள் மீது விசாரணையை தீவிரப்படுத்த திட்டம்; தேசிய பாதுகாப்பு முகமைக்கு சென்னையில் தனி அலுவலகம்: எஸ்பி தலைமையில் அமைக்க முடிவு

செய்திப்பிரிவு

சென்னை

தேசிய பாதுகாப்பு முகமைக்கு சென்னையில் எஸ்பி தலைமையில் தனியாக அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் தீவிர வாதிகள் தொடர்பான வழக்குகளை தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. டெல்லியில் என்ஐஏவின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

ஜம்மு, ராய்பூர், கொல்கத்தா, குவஹாட்டி, லக்னோ, மும்பை, ஹைதராபாத், கொச்சி ஆகிய 8 நகரங்களில் எஸ்பி தலைமையில் இதற்கு அலுவலகம் உள்ளது. இந்த எஸ்பி அலுவலகத்தை மையமாகக் கொண்டு, அந்தந்த மாநிலங்களைச் சுற்றியுள்ள இடங்களிலும் உள்ள முக்கியமான வழக்குகளை விசாரித்து வருகிறது.

11 முக்கிய வழக்குகள்

தமிழகத்தில் என்ஐஏவுக்கு தனியாக அலுவலகம் கிடையாது. ஒரே ஒரு ஆய்வாளர் தலைமையில் ஒரு கிளை அலுவலகம் மட்டும் கிண்டி சிட்கோ வளாகத்தில் உள்ளது. ஆனால் பாகிஸ்தான் உளவாளி வழக்கு, ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அன்சருல்லா தீவிரவாதிகள் வழக்கு, ராமலிங்கம் கொலை வழக்கு என தமிழகத்தில் மட்டும் 11 முக்கிய வழக்குகளை என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்குகள் விசாரணைக்கு கொச்சி அல்லது டெல்லியில் இருந்து அதிகாரிகள் வந்து செல்கின்றனர். இதனால் விசாரணையில் காலதாமதம், மொழிப்பிரச்சினை, தகவல் தொடர்பு என பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

தமிழக போலீஸாரின் உதவி

மேலும், பல முக்கியமான சோதனைகள் மற்றும் விசார ணைகளுக்கு தமிழக போலீஸாரின் உதவியையே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தற்போது தென் மாநிலங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சென்னையில் என்ஐஏ பிரிவுக்கு என தனியாக ஓர் அலு வலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத், கொச்சியைப் போல ஓர் எஸ்பி தலைமையில், 4 டிஎஸ்பிக்கள், 8 ஆய்வாளர்கள், 16 உதவி ஆய்வாளர்கள், 40 கான்ஸ்டபிள்கள் கொண்ட ஒரு பிரிவை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சட்ட ஆலோசகர்கள், தொழில்நுட்ப பணி யாளர்கள், அலுவலக பணியாளர் கள், உதவியாளர்கள் ஆகியோ ரையும் நியமிக்க முடிவு செய் யப்பட்டுள்ளது.

இந்தத் தனி அலுவலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஓர் இடத்தைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி அங்கு இடம் கிடைக்காத பட்சத்தில் மாநில அரசு இடத்தில் செயல்பட முடிவு செய்துள் ளனர்.

தீவிர கண்காணிப்பு

சென்னையில் எஸ்பி தலைமை யில் தனி அலுவலகம் தொடங் கப்படும் பட்சத்தில், எப்ஐஆர் பதிவு செய்வது, விசாரணை நடத்துவது, தீவிரவாதிகளைக் கண்காணிப்பது போன்ற பணிகள் மிகவும் எளிதாகிவிடும்.

இங்கிருந்தபடியே, தென் மாநிலங்கள் முழுவதும் கண் காணிப்பை பலப்படுத்த முடியும் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT