கோவை
கோவை ரயில் நிலைய வளாகத் தில் உள்ள பார்சல் பிரிவு அலுவல கத்தின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.
கோவை ரயில் நிலையத்தில் வளாகத்தின் பின்புறம், கூட்செட் சாலை நுழைவுவாயில் அருகே பார்சல் பிரிவு அலுவலகம் உள் ளது. இங்கு ரயில்வே பார்சல் பிரிவு அதிகாரி கண்காணிப்பின் கீழ், ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று அதிகாலை வழக்கம் போல் ஊழியர்கள் பொருட்களை எடை போட்டு, பார்சல் செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அதி காலை 3.40 மணியளவில், அலுவல கத்தின் பக்கவாட்டு சுவர் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. சுவரின் ஒரு பகுதி, பொருட்கள் இருப்பு வைக்கும் அறையில் (கிளாக் ரூம்) விழுந்தது.
50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கொட்டும் மழையில், பொக்லைன் மூலம் இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்ட னர். இடிபாடுகளில் சிக்கிய கார மடை பவளமணி (50), மேட்டுப் பாளையம் காட்டூர் முகமது இப் ராகிம் (55), பீகாரைச் சேர்ந்த ராஜீவ் குமார் ஆகியோரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். வழியிலேயே பவளமணி, முகமது இப்ராகிம் ஆகியோர் உயிரிழந்தனர். ராஜீவ்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.