சென்னை
தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ள னர்.
காஷ்மீர் விவகாரத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள் ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை கண்காணிக்க 5 ஏடிஜிபிக்கள் தனி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக எந்த வன்முறை சம்பவமும் நடைபெறாமல் போலீ ஸார் பார்த்துக் கொண்டனர்.
இந்நிலையில், சில ரகசிய தகவல்களின்பேரில் தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, ஒவ் வொரு நபரையும் கண்காணித்து வருகின்றனர். இன்று (வெள்ளிக் கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கூடுதல் விழிப்புடன் செயல் பட போலீஸாருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. வார இறுதி நாட்களின் இரவில் வழக்கமாக செய்யப்படும் வாகன சோதனையை பகலிலேயே தொடங்க அதிகாரிகள் உத்தரவிட் டுள்ளனர்.
சமூக விரோதிகளின் நடவடிக் கைகளை முன்கூட்டியே கண்ட றிந்து தகவல் சொல்லுமாறு தமிழக உளவுப்பிரிவு போலீஸாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை தற்போது தமிழக போலீ ஸார் எடுத்து வருகின்றனர். முதல் கட்டமாக சென்னை, காஞ்சிபுரத் தில் மக்கள் அதிகம் கூடும் இடங் களில் கூடுதல் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த இரு பகுதிகளுக்கும் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் நேரில் வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்துள்ளனர்.