அத்திவரதர் தரிசனத்துக்கு புதிதாக அமைக்கப்பட்ட நடைமேடை பாலம். படங்கள்:எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்ட ‘விஐபி’ தரிசனம்: அத்திவரதரை காண நேற்று மட்டும் 3.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் விஐபி தரிசனம் உரிய அறிவிப்புகள் இல்லாமல் திடீ ரென்று ரத்து செய்யப்பட்டதாலும், கார் நிறுத்துமிடம் நேற்று வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதாலும் முக்கிய பிரமுகர்கள் பலர் பெரும் அவதியடைந்தனர்.

காஞ்சிபுரத்தில் நடைபெறும் அத்திவரதர் தரிசனத்தில், 39-ம் நாளான நேற்று மஞ்சள் மற்றும் ரோஜா நிறப் பட்டாடை அணிந்து அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்றும் அத்திவரதரை தரிசிக்க வழக்கம்போல் 3.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர். மொத்தமாக இதுவரை 70 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.

முக்கிய பிரமுகர்கள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை யும், அதற்கு பிறகு ஆன்-லைன் மூலம் பதிவு செய்தவர்களும் தரிசிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே அறிவுறுத்தி யுள்ளது. அதேபோல் மிக முக் கிய பிரமுகர்களுக்கான தரிசனத் தில் காலை 5 மணி முதல் இரவு முடியும் வரை தரிசிக்க அனுமதிக் கப்படுகின்றனர். இதனால் காலை 5 மணிக்கே வந்து பக்தர்கள் தரிசனம் செய்வர். இந்நிலையில் கோயிலுக்குள் தற்காலிக பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது. அதனால், நேற்று திடீரென்று முக் கிய பிரமுகர்களுக்கான தரிசனம் காலை 5 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து முறையான முன் அறிவிப்பு ஏதும் இல்லாததால் காவல் துறை அதிகாரிகள், நீதிபதி கள், முக்கிய அரசு அதிகாரிகள் பலர் அதிகாலையிலேயே வந்து காத்திருந்து, பின்னர் திரும்பிச் சென்றனர். காத்திருக்கும் பக்தர் களிடம் 7 மணிக்கு தரிசனம் தொடங்கும் என்றும், பின்னர் 9 மணிக்கு தொடங்கும் என்றும், பின்னர் ஒரு மணிக்கு தொடங்கும் என்றும் மாறி, மாறி அறிவிப்பு செய்து போலீஸார் குளறுபடியை ஏற்படுத்தினர். இதனால் அவர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

கார் நிறுத்தும் இடத்தில் குளறுபடி

அத்திவரதர் விஐபி தரிசனம் திடீரென அறிவிப்பு இல்லாமல் ரத்து செய்யப்பட்டதால் அதிகாலையில் கார்களில் வந்த முக்கிய பிர முகர்கள் கார் நிறுத்தும் இடத்தில் இருந்து வெளியேறவில்லை. இதனால் காலை 6 மணிக்கு மேல் வந்தவர்களின் கார்களை அங்கு நிறுத்த இடமில்லாத சூழல் ஏற் பட்டது. எனவே, திருவீதிப்பள்ளம் கார் நிறுத்தும் இடத்திலோ, பச்சை யப்பன் கல்லூரி கார் நிறுத்தும் இடத்திலோ நிறுத்தும்படி போலீ ஸார் வலியுறுத்தினர். ஆனால், அங்கு காரை நிறுத்தியவர்கள் மேற்கு கோபுரம் வழியாக அத்திவரதரை தரிசிக்கச் செல்ல வேண்டும். மேற்கு கோபுரம் செல் வதற்கு அங்கிருந்து பஸ் வசதி இல் லாததால் பக்தர்கள் பலர் அவதி யுற்றனர். பலர் 2 கிமீ தூரத்துக்கு மேல் நடந்தே கோயிலின் மேற்கு கோபுர வாசலுக்கு வந்தனர்.

அதிகரிக்கும் போலீஸார் ஆதிக்கம்

அத்திவரதர் விழாவில் போலீஸார் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்கள் விருப்பத்துக்கு அவர்களின் உற வினர்கள், நண்பர்களின் வாகனங் களை எந்தப் பகுதிக்கும் அனுமதிக்கின்றனர். அதேபோல் தரிசனத்தின்போதும் முறையான அனுமதிச் சீட்டு இல்லாமல் உள்ளே வந்து, பல மணி நேரம் வரிசையில் நிற்கும் பொதுமக்களை தள்ளிவிட்டு செல்கின்றனர். இதை நுழைவு வாயிலில் இருக்கும் காவல் துறை அதிகாரிகளும் அனுமதிப்பதால் மக்கள் மத்தியில் காவல் துறையினருக்கு எதிராக கொந்தளிப்பான மனநிலை ஏற்பட் டுள்ளது. அத்திவரதர் விழாவில் முறையற்ற வகையில் காவல் துறையினர் ஆதிக்கம் செலுத்து வதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரும் நாட்களில் பல, விடு முறை நாட்களாக உள்ளன. உள் ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட் டுள்ளது. இதனால் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. அத்திவரதர் வைபவத்தில் இருக் கும் குறைபாடுகளை களையவும், பக்தர்களின் தரிசனத்தை முறைப் படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

SCROLL FOR NEXT