சென்னை
அத்திவரதரை தரிசிக்க வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இத னால் ஏற்கெனவே உள்ள விடுமுறை நாட்களையும் சேர்த்து காஞ்சிபுரம் நகர பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.
இதுவரை 50 லட்சம்
அத்திவரதர் விழா தொடங் கிய ஜூலை 1-ம் தேதி முதல் காஞ்சிபுரம் நகரில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதுவரை 50 லட்சத்துக்கும் மேற் பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து சென்றுள்ளனர். கடந்த ஆக.1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பதால், முன்பை விட நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தபடி உள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை பக்தர்கள் வந்து செல்வதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித் துள்ளது.
அதிகளவில் பக்தர்கள் காஞ்சிபுரம் நகருக்குள் வரு வதால் காலை,மாலை வேளை களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பாதிக் கப்படுகின்றனர்.
இந்நிலையில், பக்தர்களுக் கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுசெய்வதற்காக முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் கூட் டம் நடைபெற்றது. அப்போது, "பக்தர்கள் அதிகளவில் காஞ்சி புரம் நகருக்கு வருவதை கருத் தில் கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படும் இடை யூறுகளை தவிர்க்கும் வகை யில், ஆகஸ்ட் 13, 14 மற்றும் 16 ஆகிய 3 நாட்கள் காஞ்சி புரம் நகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப் படும்’’ என்று முதல்வர் பழனி சாமி அறிவித்தார்.
முன்னதாக, ஆகஸ்ட் 10, 11 ஆகிய தேதிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதா லும், 12-ம் தேதி (திங்கள்கிழமை) பக்ரீத் தினம் என்பதாலும் விடுமுறை நாட்களாகும். ஆகஸ்ட் 15-ம் தேதி (வியாழக் கிழமை) சுதந்திர தினம் என்ப தால் விடுமுறை நாள். ஆகஸ்ட் 17, 18 ஆகியவையும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை நாட்கள். இந்த நாட்களுக்கு இடையில் வரும் ஆகஸ்ட் 13, 14 மற்றும் 16 (செவ்வாய், புதன் மற்றும் வெள்ளி) ஆகிய 3 தினங்களும் உள்ளூர் விடுமுறை என தற்போது முதல்வர் அறிவித் துள்ளார்.
இதனால் காஞ்சிபுரம் நகர பள்ளி, கல்லூரிகளுக்கு 9 நாட் கள் தொடர் விடுமுறை விடப் பட்டுள்ளது.