தமிழகம்

சட்டக்கல்லூரி விடுதி மாணவிகள் மயக்கம்: சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

திருப்போரூர்

புதுப்பாக்கம் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்த மாணவிகளில் 25 பேர், வாந்தி மற்றும் மயக்கமடைந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்போரூரை அடுத்த புதுப் பாக்கத்தில் செயல்படுகிறது அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி. இக்கல்லூரி விடுதியில் 232 மாணவி கள் தங்கிப் படிக்கின்றனர். இந் நிலையில், விடுதி அறைகளின் சீலிங் பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுவதாகவும், விடுதியில் வழங் கும் உணவு தரமற்றதாக இருப்ப தாகவும் கல்லூரி நிர்வாகத்திடம் விடுதி மாணவிகள் புகார் தெரி வித்து வந்துள்ளனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று கல்லூரி வகுப்புகளுக்கு வந்த மாணவி களில் சிலர் வாந்தி எடுத்தவாறு மயக்கம் அடைந்துள்ளனர். மேலும், சில மாணவிகளுக்கு வயிற்றுப் போக்கும் ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து, கல்லூரி நிர்வாகத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதிக் கப்பட்ட 25 மாணவிகளை கேளம் பாக்கத்தில் உள்ள தனியார் மருத் துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, 5 மாணவிகள் தீவிர சிகிச்சை பிரிவிலும் மற்ற மாணவிகள் உள்நோயாளிப் பிரி விலும் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து, கல்லூரி நிர் வாகத்தை தொடர்புகொண்ட போது ‘விடுதியில் உள்ள சில மாணவிகளுக்கு கடந்த சில நாட்களாகவே இயற்கை உடல் உபாதைகள் இருந்ததால், உடல் சோர்வு காரணமாகத்தான் மயக்கம் அடைந்துள்ளனர். வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை’ என்ற னர்.

SCROLL FOR NEXT