முக்கிய பிரமுகர்கள் தரிசனத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல். 
தமிழகம்

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க 3 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்: மின்சாரம் பாய்ந்தும், கூட்ட நெரிசலிலும் 21 பேர் காயம்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்

அத்திவரதர் வைபவத்தின் 38-ம் நாளான நேற்று சுமார் 3 லட்சம் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்த னர். இளமஞ்சள் மற்றும் இளஞ் சிவப்பு நிறப் பட்டாடை அணிந்து அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

முக்கிய பிரமுகர்கள் தரிசன வழியில் மின்சாரம் பாய்ந்ததாலும், பின்னர் ஏற்பட்ட நெரிசலிலும் 21 பேர் காயமடைந்தனர்.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வைபவம் நடைபெறுவதால் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். அத்திவரதர் வைப வம் நிறைவடைய இன்னும் 10 நாள் களே உள்ள நிலையில் அளவுக்கு அதிகமாக மக்கள் வருவதால் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது.

முக்கிய பிரமுகர்கள், நன் கொடையாளர்களுக்கான சிறப்பு அனுமதி வழியில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பொது தரிசனத்தில் பொதுமக்கள் 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர். அதேபோல் முக்கிய பிரமுகர்கள் தரிசனத்திலும் இதே அளவுக்கு நேரம் ஆனது.

மின்சாரம் பாய்ந்தது

முக்கிய பிரமுகர்கள் தரிசன வழியில் செல்லும்போது அங்கு இருந்த மின்சார கம்பியை தொட்ட சுவேதா என்ற பெண் மீது மின்சாரம் பாய்ந்தது. அது அருகில் இருந்த வர்கள் மீதும் பாய்ந்ததால் அனை வரும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் பெரும் நெரிசல் ஏற்பட்டது; பலர் கீழே விழுந் தனர். அதனால் ஏற்பட்ட நெரிசலில் 21 பேர் காயமடைந்தனர். இவர் களுக்கு கோயிலிலும் மருத்துவ முகாமிலும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சுகாதாரத் துறை இணை இயக்குநர் செந்திலிடம் கேட்டபோது, "மின்சாரம் பாய்ந்த தால் இருவருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் கீழே விழுந்ததில் எலும்பு முறிந்துள்ளது. மற்றவர்கள் அச்சத்தில் ஓடி ஏற்பட்ட நெரிசலில், கீழே விழுந்து லேசான காயமடைந்தனர்" என்றார்.

நெரிசலில் ஒருவர் உயிரிழப்பு

பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த லக்ஷ்மணன்(70) என்ப வர் தனது மனைவி லட்சுமியுடன் அத்திவரதரைத் தரிசிக்க வந்தார். இவர் கோயிலில் வரிசையில் செல் லும்போது திடீரென்று மயங்கி விழுந்தார். இவர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார்.

கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு

இந்த வைபவம் நடைபெறும் அடுத்த 10 நாள்களில் விடுமுறை நாட்கள் அதிகம் இருப்பதால் கூட்டம் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் முதியோர், குழந்தைகள் எச்சரிக் கையுடன் தரிசனத்துக்கு வர வேண்டும். கூடிய வரை இறுதி சில நாள்களில் அவர்கள் தரிசனத்தை தவிர்ப்பது கூட பாதுகாப்பானது என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

SCROLL FOR NEXT