தமிழகம்

அத்திவரதரை தரிசிக்க 2 நாள்கூட ஆகலாம்: பக்தர்கள் உரிய முன்னேற்பாடுகளுடன் வர அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்

இனிவரும் நாட்களில் அத்திவர தரை தரிசனம் செய்ய 2 நாட்கள் கூட ஆக வாய்ப்புள்ளதால், பக்தர்கள் முன்னேற்பாடுகளுடன் வர வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேற்று கூறியது:

காஞ்சிபுரம் வரதராஜ பெரு மாள் கோயிலில் அத்திவரதர் தரி சனம் 37 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆக.5-ம் தேதி கணக் கின்படி இதுவரை 49 லட்சத்து 50 ஆயிரம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர். ஆக.5-ம் தேதி மட்டும் 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் தரிசித்துள்ளனர். கோயிலுக்குள் அதிக பக்தர்கள் வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு அவர்களை தேக்கிவைத்துப் பின்னர் வரிசைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறோம்.

இனிவரும் நாட்களில் அத்தி வரதரை தரிசிக்கும் காலம் ஒரு நாளைக் கடந்து அடுத்த நாளுக்கும் செல்ல வாய்ப்பு இருப்பதால் பக்தர் கள் அதற்கு உண்டான உரிய முன் னேற்பாடுகளுடன் வரவேண்டும். பக்தர்களை தேக்கி வைக்கப்படும் இடத்தில் இருந்து வரிசைக்கு அழைத்து வருவதற்கு மினி பேருந்து ஏற்பாடு செய்துள்ளோம்.

விஐபி தரிசனம் ரத்து

ஆகஸ்ட் 16, 17 ஆகிய தேதி களில் முக்கிய பிரமுகர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 16-ம் தேதி காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. ஆக.17-ம் தேதி நண்பகல் 12 மணியுடன் கிழக்கு கோபுரவாசல் மூடப்படும். கோயிலுக்கு உள்ளே வந்தவர்கள் மட்டும் அத்திவரதரை தரிசனம் செய்யலாம். மாலை 5 மணியுடன் தரிசனம் முடிக்கப்பட்டு, அத்திவரதரை மீண்டும் அவரது இடத்தில் வைப்பதற்கான பூர்வாங் கப் பணிகள் தொடங்கும் என்றார்.

ஏடிஜிபி ஜெயந்த் முரளி கூறும் போது, “ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் முதல் 11 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடிகிறது. தற்போது 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை பக்தர்கள் வருவதால், இனி ஒரேநாளில் அத்தி வரதரை தரிசிக்க முடியாது. திருப்பதிபோல் காத்திருந்துதான் தரிசிக்க வேண்டும்.

விஐபி நுழைவு வாயிலுக்கு வருபவர்கள் அனுமதி அட்டை இருந்தால் மட்டுமே வர முடியும். போலீஸார் யாராவது அனுமதி அட்டை இல்லாமல் பக்தர் களை முக்கிய பிரமுகர்கள் நுழைவு வாயிலில் அழைத்துச் செல்ல முயன் றால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT