தமிழகம்

வேலூர் மக்களவைத் தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு- 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு 

செய்திப்பிரிவு

வேலூர்

வேலூர் மக்களவைத் தேர்தலில் பதிவான நிலையில், அரசியல் கட்சியினர் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் வைக்கப்பட்ட அறை களுக்கு 'சீல்' வைக்கப்பட்டன.

வேலூர் மக்களவைத் தொகுதிக் கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. 1,553 வாக்குச் சாவடி களில் 179 சாவடிகள் பதற்ற மானவை என கண்டறியப்பட்டன. தேர்தல் பாதுகாப்புப் பணியில் 3,957 காவலர்கள், 400 ஊர்க்காவல் படையினர், 1,600 துணை ராணு வப் படையினர் பாதுகாப்புப் பணி யில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 71.51 சதவீத வாக்குகள் பதிவாயின. இதில், சட்டப்பேரவை வாரியாக விவரம் பின்வருமாறு: வேலூர் (66.65%), அணைக்கட்டு (74.77%), குடியாத்தம் (69.06%), வாணியம் பாடி (73.25%), ஆம்பூர் (70.51%) வாக்குகள் பதிவாகியுள்ளன.

தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்துக்கு நேற்று அதிகாலை கொண்டு வரப்பட்டன. பின்னர் சட்டப்பேரவை தொகுதி வாரி யாக பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டப்பட்டு அரசியல் கட்சியினர் முன்னிலையில் 'சீல்' வைக்கப் பட்டது.

வரும் 9-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் வாக்கு எண்ணும் மையத்துக்கு 320 காவலர்கள், 80 சிறைப்பு காவல் படையினர், 148 துணை ராணுவப் படையினர் அடங்கிய 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 76 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட 2 கட்டிடங்களில் 2 இடிதாங்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறும் போது, ‘‘வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 9-ம் தேதி காலை 7 மணிக்கு அனைத்துக் கட்சி முகவர்கள் முன்னிலையில் பாது காப்பு அறையில் சீல் பிரிக்கப்பட்டு 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்படும். வாக்கு எண்ணும் பணியில் 300-க்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT