மணிகண்டன் 
தமிழகம்

போலீஸ் எனக்கூறி மிரட்டி அழைத்துச் சென்று மாணவி பலாத்காரம்;  துவாக்குடி இளைஞரின் கை, கால் உடைந்தது: பிடிக்க முயன்றபோது மாடியிலிருந்து தவறி விழுந்ததாக போலீஸார் தகவல்

செய்திப்பிரிவு

திருச்சி

நண்பருடன் தனியாக இருந்த மாணவியை, போலீஸ் எனக்கூறி மிரட்டி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தவரின் கையும், காலும் உடைந்தன. அவரைப் பிடிக்க முயன்றபோது மாடியி லிருந்து தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

திருச்சியில் செயல்படும் கல்வி நிறுவனம் ஒன்றில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில், துவாக்குடி பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தம் அருகே தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த ஒரு இளைஞர் தன்னை போலீஸ் எனக் கூறி, அவர்களிடம் விசாரித்துள்ளார். பின்னர், சந்தே கம் இருப்பதால் தன்னுடன் காவல் நிலையத்துக்கு வருமாறு அந்த மாணவியை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்ற முயற்சித்துள்ளார். இதற்கு அந்த மாணவியின் நண்பர் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவரை அந்த நபர் தாக்கியதுடன், மாணவியை மிரட்டி இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

பின்னர், கல்வி நிறுவனத்தை யொட்டி உள்ள காட்டுப் பகுதிக்குள் சென்ற அவர், அந்த மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். அதன்பின், அங்கிருந்து தப்பிவந்த மாணவி, அங்குள்ள மருத்துவமனையில் சேர்ந்தார்.

பின்னர், இதுகுறித்த அம்மாண வியின் பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில், மாவட்ட எஸ்.பி ஜியாவுல் ஹக் மற்றும் போலீஸார் மருத்துவமனைக்குச் சென்று அந்த மாணவியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, அந்த மாணவி கூறிய தகவலின் அடிப்படையில், தனிப்படையினர் விசாரணையைத் தொடங்கினர். அப்போது, அந்த நபர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய துவாக்குடி வாழவந்தான்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்த மணிகண் டன்(30) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அவரை போலீஸார் பிடிக்க முயன்றபோது, ஒரு வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவரது ஒரு கையும், ஒரு காலும் உடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மணிகண்டனுக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது, குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

பின்னர் இ.த.ச 366, 376, 506 மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

இவ்வழக்கில் சிறப்பாக செயல் பட்டு, ஒரே நாளில் குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீஸாரை டி.ஐ.ஜி வே.பால கிருஷ்ணன், எஸ்.பி ஜியாவுல்ஹக் உள்ளிட்டோர் பாராட்டினர்.

SCROLL FOR NEXT