தமிழகம்

ஊழியர்களிடம் பிடித்தம் செய்து சங்கங்களுக்கு செலுத்தாமல் போக்குவரத்து கழகங்கள் ரூ.800 கோடி பாக்கி: கூட்டுறவு பதிவாளர் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை

செய்திப்பிரிவு

எஸ்.ஸ்ரீனிவாசகன்

மதுரை

ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்த கடனுக்கான தவணைத் தொகை ரூ.800 கோடியை கூட்டு றவுச் சங்கங்களுக்குச் செலுத்தா மல் போக்குவரத்துக் கழகங்கள் பாக்கி வைத்துள்ளன. இதனால் கடன் வழங்க முடியாமல் சங்கங் கள் முடங்கும் நிலையைத் தவிர்க்க இன்று கூட்டுறவுப் பதிவாளர் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 7 மண்டலங்களில் பணி யாற்றி வரும் 1,31,298 ஊழியர்க ளுக்கு கடன் உள்ளிட்ட வசதிகளைச் செய்துதர பணியாளர்கள் கூட்டுற வுச் சிக்கன நாணயச் சங்கம் செயல் படுகிறது. இங்கு ஒரு தொழிலாள ருக்கு ரூ.50 ஆயிரம் முதல் சில லட்சங்கள் வரை கடன் வழங்கப் படுகிறது.

மாதந்தோறும் ஊழியர்களின் ஊதியத்தில் கடனுக்கான தவணையை பிடித்தம் செய்து செலுத்திவந்த நிலையில், நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி போக்குவரத்துக் கழகங்கள் 15 மாதங்கள் வரை செலுத்தவில்லை. மாநில அளவில் கூட்டுறவுச் சங்கங் களுக்கு ரூ.800 கோடி வரை பாக்கி உள்ளது.

ஊழியர்கள் தவணைத் தொகை யைச் செலுத்தி முடித்த பின்னரும், அத்தொகை வரவு ஆகாததால், புதிய கடன் பெற ஓராண்டுக்கும் மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய கூட்டுறவு வங்கிக்குத் தவணையைச் செலுத்த முடியாத பல சங்கங்கள், கடனே வழங்க முடி யாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள் ளன. இது குறித்து கூட்டுறவுச் சங்கப் பதிவாளருக்கு புகார்கள் சென்றன. தமிழக அரசின் தலைமைச் செயலர் தலைமையில் ஜூலை 22-ல் நடந்த கூட்டத்தில் தவணைத் தொகையை முழுமையாக போக்குவரத்துக் கழகங்களிடமிருந்து வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து இன்று (ஆக.6) சென்னையில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. இது தொடர்பாக கூட்டுறவுச் சங்கங்க ளின் பதிவாளர் கு.கோவிந்தராஜ் அனைத்துப் போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குநர்கள், கூட்டு றவு இணைப் பதிவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் எடுக்கப்படும் முடிவு போக்குவரத் துப் பணியாளர் கூட்டுறவுச் சங்கங் களின் எதிர்காலத்தைத் தீர்மானிக் கும் எனத் தெரிகிறது.

போக்குவரத்துக்கழகப் பணியா ளர் சங்க மாநில இணைப் பொதுச் செயலாளர் சம்பத் கூறுகையில், ஊழியர்களிடம் பணத்தைப் பிடித்து சங்கங்களுக்கு செலுத்தும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முழு ஊதியத்தையும் வங்கியில் செலுத்தச்செய்து, வங்கி கள் மூலம் சங்கங்கள் இசிஎஸ் முறை யில் கடன் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பாக்கி எவ்வளவு?

மதுரையில் (10 மாதம்) ரூ.14 கோடி, திண்டுக்கல்லில் (13 மாதம்) ரூ.11 கோடி, சென்னையில் (10 மாதம்) ரூ.80 கோடி, வேலூரில் (12 மாதம்) ரூ.8 கோடி, திருநெல்வேலியில் (15 மாதம்) ரூ.7 கோடி என மாவட்ட வாரியாக தவணைத்தொகையை ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்தும், சங்கங்களுக்குப் போக்குவரத்துக் கழகங்கள் செலுத்தவில்லை.

SCROLL FOR NEXT