டிஜிபி திரிபாதி 
தமிழகம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு தீவிர வாகன சோதனை நடத்த உத்தரவு: மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று முதல் தீவிர வாகன சோதனையை போலீஸார் தொடங்கியுள்ளனர்.

ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று மத்திய உளவுத்துறை ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்து மாநில அரசுகளுக்கும் எச்சரிக்கை அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்துள்ளது.

சுதந்திர தினத்துக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில் பாதுகாப்புப் பணிகளை இப்போதே போலீஸார் தீவிரப்படுத்தத் தொடங் கியுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங் கள், முக்கிய கோயில்கள், பேருந்து, ரயில் நிலையங்கள், பொழுதுபோக்கு மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தமிழகம் முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி களில் நின்று வாகனங்களைக் கண்காணித்து, சந்தேகத்துக்குரிய வாகனங்களை சோதனையிடவும் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட மற்றும் மாநகரப் பகுதிகளுக்கு உள்ளே இருக்கும் சாலைகளிலும் வாகன சோதனை நடத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

வாகன சோதனை நடத்துவதற் காக ஒவ்வொரு காவல் நிலையத் திலும் தனியாக குழுக்கள் அமைக்க வும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக பாதுகாப்பு தொடர்பாக தனியாக கூட்டம் நடத்தி, மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு சுற்றறிக் கையும் அனுப்பப்பட்டு உள்ளது. வாகன சோதனையை சுதந்திர தினம் முடியும் வரை தொடரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT