சென்னை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மத்தியில் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜக, தங்களுக்கு உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி மக்களுக்கு எதிரான சட்டங்களை அவசர அவசரமாக நிறைவேற்றி வருகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் திருத் தம், தேசிய புலனாய்வு முகமை சட்டத் திருத்தம் என பல்வேறு அடக்குமுறை, உரிமை பறிப்பு சட் டங்களை பாஜக அரசு நாடா ளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது. முக்கிய மசோ தாக்களை நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.
மத்திய பாஜக அரசின் இந்த அடக்குமுறை, உரிமை பறிப்பு சட்டங்களைக் கண்டித்து ஆகஸ்ட் 6-ம் தேதி (நாளை) தமிழகம் முழு வதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள் ளது. நான் (கே.பாலகிருஷ்ணன்) விழுப்புரத்திலும், அரசியல் தலை மைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் சென்னையிலும் நடை பெறும் ஆர்ப்பாட்டங்களில் பங் கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.