தமிழகம்

ஆந்திரா, கர்நாடகா போல தமிழகத்திலும் அதிக அளவில் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க திட்டம்: சட்டக் கல்வியின் தரம் கேள்விக்குறியாகும் என்று வல்லுநர்கள் கருத்து

செய்திப்பிரிவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை

ஆந்திரா, கர்நாடகா போல தமிழகத்திலும் அதிக எண்ணிக்கையில் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு செய்வது சட்டக் கல்வியின் தரத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், தருமபுரி, ராமநாதபுரம் என 11 இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு இளநிலை சட்டப் படிப்பும், முதுநிலை சட்டப் படிப்பும் வழங்கப்படுகின்றன. இக்கல்லூரிகளில் மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

சேலம், நாமக்கல், தேனி ஆகிய 3 இடங்களிலும் புதிதாக சட்டக் கல்லூரிகள் தொடங்க தமிழக சட்டக் கல்வி இயக்குநரகம் துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதேபோல, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளி மூலமாகவும், திருச்சி ரங்கம் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் மூலமாகவும் சட்டக் கல்வி வழங்கப்படுகிறது.

சேலத்தில் சென்ட்ரல் சட்டக் கல்லூரி, திண்டிவனத்தில் சரஸ்வதி சட்டக் கல்லூரி ஆகிய இரு தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு தமிழக அரசு ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது.

இதுதவிர, விஐடி, சாஸ்த்ரா, எஸ்ஆர்எம், சவீதா உட்பட 10-க்கும் மேற்பட்ட நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் சட்டக் கல்வியை பயிற்றுவித்து வருகின்றன.

ஆனால், அண்டை மாநிலங்களான ஆந் திரா, கர்நாடகாவில் தனியார் சட்டக் கல்லூரி கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இங்கு தேர்வு எழுதச் சென்றாலே, பட்டம் பெற்று விடலாம் என்ற நிலை உள்ளது. இதனால், தமிழகத்தில் இருந்து கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகள், ரவுடிப் பட்டியலில் உள்ளவர் கள்கூட இக்கல்லூரிகளில் சேர்ந்து, எளி தாக சட்டப்படிப்பை விலை கொடுத்து வாங்கிவிடுகின்றனர் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் ஒரு வழக்கு விசாரணையின்போது வேதனை தெரிவித்து இருந்தனர்.

இந்த சூழலில் ஆந்திரா, கர்நாடகா பாணி யில் தமிழகத்திலும் அதிக எண்ணிக்கையில் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தலைநகர் சென்னை, கடைக் கோடியான கன்னியாகுமரி என அரசு சட் டக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க பல் வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் பிரமுகர் கள் போட்டிபோட்டு விண்ணப்பித்து வருவ தாகக் கூறப்படுகிறது. இது சட்டக்கல்வி யின் தரத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.அரி பரந்தாமன்: கல்வி எப்போதுமே அரசின் கைகளில் மட்டுமே இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் தரம் சிறப்பாக இருக் கும். அதேநேரம் மருத்துவம், பொறியியல் படிப்புகளை தனியார் வழங்கும்போது சட்டக் கல்வியை மட்டும் தனியார் வழங்கக் கூடாது என எதிர்க்க முடியாது. ஏழை, எளிய மாணவர்களுக்கு சட்டக் கல்வி எளிதாக கிடைக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். ஆனால், அதிக எண்ணிக்கையில் கல்லூரி களுக்கு அனுமதி வழங்கக்கூடாது

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்ஜிஆர் பிரசாத்: தமிழகத்தில் சட்டக் கல்வி மட்டும்தான் இன்னும் முழுவதுமாக தனியார் ஆக்கிரமிப்புக்கு செல்லவில்லை. தனியார் கல்வி நிறுவனங்கள் என்றாலே வணிக நோக்கில்தான் செயல்படும். ஓராண் டில் சுமார் 4 லட்சம் பேர் சட்டம் படித்து வழக்கறிஞர்களாக வெளியேறுகின்றனர். இவர்களுக்கே நீதிமன்றத்தில் வேலை இருக் கிறதா என்றால் புரியாத புதிர்தான். அதே நேரம் இந்த கல்வியை அரசே வழங்கினால் தேவைக்கேற்ப, தரமான வழக்கறிஞர்களை உருவாக்க முடியும்.

பொறியியல் கல்வியை இப்படி இஷ்டம் போல அனுமதித்துதான் இன்று பல பொறியியல் பட்டதாரிகள் உணவுப் பொட்டலம் விற்கும் நிலை ஏற்பட் டுள்ளது. அந்த நிலைமை சட்டத் தொழிலுக் கும் வந்துவிடக்கூடாது.

உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்: ஒரு தனியார் சட்டக் கல்லூரி தொடங்க முதலில் தமிழக சட்டக் கல்வி இயக்குநர்தான் அனுமதி வழங்க வேண்டும். பின்னர் தமிழக அரசும், சட்டப் பல்கலைக்கழகமும் ஆட்சேபணை இல்லை என சான்று வழங்கினால், அதன் பிறகே அந்த கல்லூரிக்கு அனுமதி வழங்குவதா, வேண்டாமா என்பதை அகில இந்திய பார் கவுன்சில் முடிவு செய்யும். அதற்காக ஒட்டு மொத்தமாக எல்லா தனியார் கல்லூரிகளை யும் குறைகூற முடியாது. அதேநேரம் தனி யார் கல்லூரிகள் புற்றீசல் போல பெருகி னாலும்கூட, தரம் இல்லாவிட்டால் காலப் போக்கில் அவை காணாமல் போய்விடும். சட்டக் கல்வியின் தரத்தில் அகில இந்திய பார் கவுன்சிலும், தமிழக அரசும் கொஞ்சம்கூட சமரசம் செய்துகொள்ளக் கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

          
SCROLL FOR NEXT