தமிழகம்

முன்னாள் பிரதமரின் ஆலோசகர் என் மீது பொய் புகார்: நடிகை சங்கீதா

செய்திப்பிரிவு

முன்னாள் பிரதமரின் ஆலோசகர் என் மீது பொய் புகார் கொடுத் துள்ளார் என்று நடிகை சங்கீதா கூறியுள்ளார்.

வளசரவாக்கம் ஜானகி நகரில் வாடகை வீட்டில் வசித்துவருபவர் உஷா சங்கர நாராயணன். முன் னாள் பிரதமர் வாஜ்பாயின் ஆலோ சகராக பணியாற்றிய அவர் தனது வீட்டில் தெருநாய்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தன்னை வீட்டை விட்டு காலி செய்யுமாறு கூறி மிரட்டுவதாக நடிகை சங்கீதா, அவரது கணவர் கிரிஷ், தெருவில் வசிக்கும் பாஸ்கரன், கலை, வீட்டு உரிமையாளர் நட்ராஜ் ஆகியோர் மீது உஷா சங்கர நாராயணன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து நடிகை சங்கீதாவி டம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:

உஷா சங்கர நாராயணன் வளர்ந்து வரும் நாய்கள் தெருவில் உள்ள ஒரு குழந்தையை கடித்துள்ளன. அந்தக் குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதே போல, எங்கள் வீட்டின் காம்ப வுண்ட் சுவரை தாண்டி வந்து வீட்டில் உள்ளவர்களை தாக்கவும் நாய்கள் முயற்சி செய்தன. இது பற்றிக் கேட்டால் எனக்கு உயர் அதிகாரிகள் பலரைத் தெரியும். உங்களால் முடிந்ததைப் பாருங்கள் என்று அவர் எச்சரித்தார். நாங்கள் பேசியதை வீடியோ எடுத்து வைத்து கொண்டு மிரட்டுகிறார். நடி கையை பற்றி தெரியும் என்று பயன்படுத்தக்கூடாத வார்த்தை களால் திட்டுகிறார்.

இந்த தெருவுக்கு அவர் குடி வந்து 5 மாதங்கள் ஆகிறது. அவர் வந்தது முதல் இந்த பிரச் சினை இருக்கிறது. அவர் தங்கி யிருக்கும் வீட்டுப்பக்கம் யாரும் போகவே முடியவில்லை. கேட்டால் ஹியூமன் ரைட்ஸ் அதிகாரிகளை பேச விட்டு மிரட்டவும் செய்கிறார். நாய்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது முக்கியம்தான். அதே நேரத்தில் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கக்கூடாது. இதுபற்றி கேட்டதற்குத்தான் எங்கள் மீது பொய்யான புகார் கொடுத்துள் ளார். இவ்வாறு அவர் கூறினார்.

அடுக்குமாடி குடியிருப்பில் நாய் வளர்க்கலாமா?

காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அடுக்கு மாடி குடியிருப்பில் நாய்கள் வளர்ப்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அந்த நாயால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு எந்த தொந்த ரவும் இருக்கக் கூடாது. மேலும், வீட்டில் வளர்க்கும் நாய்க்கு மாநகராட்சியிடம் இருந்து உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஒரு நாயை வீட்டில் வளர்ப்பதால் பெரிய அளவில் பிரச்சினைகள் இருக்காது.ஆனால் இரண்டிற்கும் மேற்பட்ட நாய்களை ஒரே இடத்தில் வளர்க்கும்போது அதற்கான வசதி கள் அந்த இடத்தில் கட்டாயம் இருக்க வேண்டும். வீட்டில் வளர்க்கப்படும் நாயால் அருகில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படு வது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட் டால் மட்டுமே நாய் வளர்ப்பவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்" என்றார்.

SCROLL FOR NEXT