தமிழகம்

திமுகவின் ஏமாற்று வித்தை இனி பலிக்காது: அமைச்சர் காமராஜ் 

செய்திப்பிரிவு

திமுகவின் ஏமாற்று வித்தையெல்லாம் இனி பலிக்காது என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூரில் உள்ள கோட்டை கோயில் திரிபுர சுந்தரி அம்மன் கோயிலில் அமைச்சர் காமராஜ் இன்று வழிபாடு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தைப் பொருத்தவரை பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்தது. எதெல்லாம் முடியாதோ அதையெல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றியது திமுக. ஏமாற்றி அக்கட்சி வெற்றி பெற்றதை, மக்கள் உணர்ந்துவிட்டனர். ஏமாற்று வித்தையெல்லாம் இனி பலிக்காது.

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பலத்துடன் இருக்கின்றன. இதனால் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

அதிமுகவும் இத்தொகுதியில் பலமாக உள்ளது. இதனால் ஏ.சி.சண்முகம் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்'' என்றார் அமைச்சர் காமராஜ்.

SCROLL FOR NEXT