ஆம்பூர்
ஆம்பூரில் இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதற்கு அனுமதி பெறவில்லை எனக்கூறி வருவாய்த் துறையினர் திருமண மண்டபத்தை பூட்டி 'சீல்' வைத்தனர்.
வேலூர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் ஆம்பூரில் பல்வேறு இடங்களில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில், ஆம்பூர் மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இஸ்லாமிய பள்ளி வாசல்களின் முத்தவல்லிகள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
முத்தவல்லிகள் பங்கேற்ற கூட்டம் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறவில்லை என்ற புகார் தெரிவிக் கப்பட்டது. கூட்டம் நடந்து முடிந்த பிறகு மு.க. ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர், ஆம்பூர் துணை காவல் கண்காணிப் பாளர் சச்சிதானந்தம், ஆம்பூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், ஆம்பூர் வட்டாட்
சியர் சுஜாதா ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். கூட்டம் நடத்துவதற்கு உரிய அனுமதி பெற வில்லை என்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து கூட்டம் நடத்துவதற்கு அனுமதி பெறாத காரணத்தாலும், அந்த கூட்டம் நடைபெறுவது குறித்து மண்டபத்
தின் உரிமையாளர் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்காத காரணத்தாலும் ஆம்பூர் வட்டாட்சியர் சுஜாதா முன்னிலையில் வருவாய்த் துறை யினர் மண்டபத்தை பூட்டி 'சீல்' வைத்தனர்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று காலை ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம், விண்ணமங் கலம், மிட்டாளம் உள்ளிட்ட சில
கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பதாக திட்டமிடப்பட்டிருந் தது. ஆனால், கடந்த சில நாட் களாக ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் தோல் தொழிற்சாலை அதிபர்களை தொடர்பு கொண்டு, இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதற்கான முயற்சி நடத்துவது குறித்து திமுகவினருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து, மு.க.ஸ்டாலினுடன் முக்கிய நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து, ஆம்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் நேற்று நடைபெறுவதாக இருந்த தேர்தல் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப் பட்டது. அதைத் தொடர்ந்து தனியார் தோல் தொழிற்சாலை தொழிலாளர் களை சந்தித்து வாக்கு சேகரிக் கவும், இஸ்லாமிய பள்ளி வாசல் களின் முத்தவல்லிகள், தோல் தொழிலதிபர்கள் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசவும் திட்டமிடப்பட்டது. அதன்படி, தொழி லாளர்களிடமும் முத்தவல்லிகளி டமும் ஸ்டாலின் சந்திப்பு நடந்தது.
திடீரென புதிதாக திட்டமிடப் பட்டதால் தனியார் திருமண மண்டபத்தில் முத்தவல்லிகள் பங்கேற்ற கூட்டம் குறித்து தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாம லேயே தனியார் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகள், தோல் தொழிற்சாலை உரிமை யாளர்கள், தொழிலதிபர்கள், கல்வி நிறுவன அதிபர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆம்பூரில் தனியார் தோல் தொழிற்சாலையில் தொழிலாளர் களிடையேயும், தனியார் திருமண மண்டபத்தில் பள்ளிவாசல்களின் முத்தவல்லிகளிடையே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசிய கூட்டங்களில் செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. செய்தியாளர்கள் உள்ளே செல்ல முயன்றபோது தனியார் தொழிற் சாலை காவலாளிகள் மற்றும் ஸ்டாலினின் தனி பாதுகாவலர்கள் செய்தியாளர்களை தடுத்து வெளியே அனுப்பி தொழிற்சாலை கதவு மற்றும் தனியார் திருமண மண்டபத்தின் கதவுகளை இழுத்து பூட்டினர்.