தமிழகம்

தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்: 7 நகரங்களில் 100 டிகிரி வெயில்

செய்திப்பிரிவு

சென்னை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது. நேற்று 7 நகரங்களில் 100 டிகிரி அளவை விட அதிகமாக வெயில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கள் கூறியதாவது:

வடக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் காற்று வீசும் திசை மாறியதால் தமிழகம் மற்றும் புதுச் சேரியில் கடந்த ஒரு வாரமாக மழை குறைந்துள்ளது. வியாழக் கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 23 மணி நேரத்தில் ஒரு இடத்தில் கூட குறிப்பிடும் படியான மழை பதிவாகவில்லை.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஓரிரு தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவக் கூடும். வெப்பநிலையும் உயர வாய்ப்புள்ளது. நேற்று மாலை 5.30 மணி வரை எடுக்கப்பட்ட வெப்ப நிலை அளவுகளின்படி, திருச்சி, மதுரை தெற்கு மற்றும் மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி, காரைக்கால், கரூர் பரமத்தி, நாகப் பட்டினம், நாமக்கல் ஆகிய 7 நகரங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT