தமிழகம்

தமிழகத்தில் 16 மாவட்ட வருவாய் அதிகாரிகள் இடமாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை

தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளியிட்ட அறிவிப்பு:

நீலகிரி மாவட்டம், ஊட்டி கூடலூர் ஜென்மம் நில சிறப்பு அதிகாரியான பி.முருகையன், கோவை விமான நிலைய ஓடுதள விரிவாக்கம் தொடர்பான சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரியாக வும், அப்பதவியில் இருந்த ஆர்.கோவிந்தராஜூ சென்னை குடிநீர் வாரிய செயலர், மேலாண் இயக்குநராகவும், அப்பதவியில் இருந்த வி.ரவிச்சந்திரன் திருச்சி ஆவின் பொது மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரி எம்.பரமேஸ் வரி, கோவை டாஸ்மாக் முது நிலை மண்டல மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அப்பதவி யில் இருந்த எம்.எஸ்.கலை வாணி, கோவை கலால் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள் ளார். திருச்சி ஆவின் பொது மேலாளர் எம்.செல்வி, மதுரை ஒழுங்கு நடவடிக்கை ஆணைய ராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத் துக்குடி மாவட்ட வருவாய் அதிகாரி எம். வீரப்பன் ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள குடிமைப் பணிகள் பயிற்சி மைய முதல்வராக நியமிக்கப்பட் டுள்ளார்.

திருப்பூர் மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரி வி.மீனாட்சிசுந்த ரம், சென்னை உணவுப்பொருள் வழங்கல் துறை சந்தைப்பிரிவு பொது மேலாளராகவும், பேரிடர் மேலாண்மைத்துறை இணை இயக் குநர் டி.பழனிகுமார், தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் துறை வர்த்தகப்பிரிவு பொது மேலாளராகவும் நியமிக்கப்பட் டுள்ளனர்.

மதுரை மாநகராட்சி துணை ஆணையர் பி.குமரேஸ்வரன், மதுரை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளராகவும், அப்பதவியில் இருந்த எஸ்.இளங்கோ சென்னை வருவாய் நிர்வாக ஆணையரக துணை ஆணையராகவும், அப்பதவியில் இருந்த வி.முத்துசாமி, திருவள்ளூர் மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், கோவை கலால் பிரிவு துணை ஆணையர் எம்.பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரி யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஈரோடு ஆவின் பொது மேலாளர் வி.லதா, கிருஷ்ணகிரி மாவட்ட நில நிர்வாக சிறப்பு வருவாய் அதிகாரியாகவும் நிய மிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT