கோவை
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்த வழக்கில் தாய், மகன் உட் பட 3 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் வினுமோல் (33). இவர், கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலை யத்தில் சமீபத்தில் புகார் அளித்தார். அதில், ‘‘கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் நான், வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்தேன். அப்போது, பெங் களூரை சேர்ந்த வானதி சுரேந்தர் (54), அவரது மகன் ரஜீவ் (34) ஆகியோர் கோவை வடவள்ளியில் நடத்தி வந்த வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து அனுப்பும் நிறுவனம் குறித்து வாட்ஸ்அப் மூலம் தகவல் அறிந்தேன்.
அவர்களை அணுகி விசாரித்த போது, சிங்கப்பூரில் பேராசிரியர் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவ தாகவும், மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் எனத் தெரிவித்தனர். அந்த வேலைக்கு செல்ல சில லட்சங்கள் செலவாகும் என்றனர். அதை நம்பி, நான் ரூ.1.50 லட்சம் தொகையை அவர்களிடம் கொடுத்தேன். ஆனால், அவர்கள் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதற்கு உடந்தையாக நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தை சேர்ந்த தங்கராஜ் (50) இருந்தார். நான் விசாரித்தபோது, என்னைப் போல் மேலும் பலரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்தது தெரியவந்தது. அதன் பின்னர், நிறுவனத்தை மூடி விட்டு தலைமறைவாகிவிட்டனர். இது தொடர்பாக போலீஸார் விசாரித்து 3 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ எனக் கூறப்பட்டு இருந்தது.
இப்புகார் தொடர்பாக, ஆய் வாளர் யமுனாதேவி, உதவி ஆய் வாளர் அருண் தலைமையிலான மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து மோசடி, கூட்டுச்சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வானதி சுரேந்தர், ரஜீவ், தங்கராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர். இதை தொடர்ந்து வானதி சுரேந்தர், ரஜீவ் ஆகியோரை பெங்களூரிலும், தங்கராஜை நாமக்கல்லிலும் நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். வானதி சுரேந்தர், ரஜீவ் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி ரூ.35 லட்சம் மோசடி செய் துள்ளதாக தற்போது வரை 25 பேர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ள னர். கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸார் கூறும் போது, ‘‘வெளிநாட்டு வேலைக்கு முயற்சிக் கும் இளைஞர்கள், பட்டதாரிகள், அதற்காக தாங்கள் அணுகும் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் உண்மையானதாக, அங்கீகாரம் பெற்றதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அந்த நிறுவனத் தினர் மீது சந்தேகம் இருந்தால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவித்து உறுதி செய்து கொள்ள லாம். வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து அனுப்பும் நிறுவனத்தினர், வெளியுறவுத்துறை இணையதளத்தின் பிரத்யேக பிரி வில் முறையாக அனுமதி பெற்றுள் ளனரா, அதை முறையாக ஆண்டு தோறும் புதுப்பித்து வைத்துள்ள னரா என்பதை சரி பார்க்க வேண் டும். அதேபோல், வெளிநாட்டில் வேலை அளிக்கும் நிறுவனத்தின ரும், ஆட்கள் தேர்வு தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச் சக இணையதளத்தின் பிரத்யேக பிரிவில் பதிவு செய்துள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு உறுதி செய்வதன் மூலம், மோசடி நிறுவனத்தை நம்பி ஏமாறுவதை தவிர்க்கலாம்,’’ என்றனர்.