குரு பெயர்ச்சியை முன்னிட்டு பாடி திருவல்லீஸ்வரர் கோயிலில் நேற்று நடந்த லட்சார்ச்சனை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு குரு பகவான் நேற்று பெயர்ச்சி அடைந்ததையொட்டி, ஆலங்குடி குருஸ்தலம் உள்ளிட்ட குரு பகவான் கோயில்களில் பக்தர்கள் திரண்டனர்.
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று லட்சார்ச்சனை, சிறப்பு ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை லட்சார்ச்சனை நடந்தது. பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு திருவல்லீஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்தனர். இன்றைய தினம் குருபெயர்ச்சியால் நெருக்கடிகளை சந்திக்கக்கூடும் என்று சொல்லப்படுகிற ராசியினருக்கு பரிகார ஹோமம் நடத்தவுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.