தமிழகம்

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கான கட்டணம் ரத்து: பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்விக்கான கட்டணத்தை ரத்து செய்து பள்ளிக் கல்வித் துறை அர சாணை வெளியிட்டுள்ளது.

தமிழக பள்ளி க் கல்வித் துறை யின்கீழ் 46 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 69 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அரசுப்பள்ளியில் தமிழ்வழியில் பயில்பவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் இருந்து விலக்கு தரப்பட்டுள்ளது.

ஆங்கில வழியில் படிப்பவர் களுக்கு 6 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.200-ம், 9, 10-ம் வகுப்புக்கு ரூ.250-ம், மேல்நிலை வகுப்புக ளுக்கு ரூ.500-ம் கட்டணமாக வசூ லிக்கப்படுகிறது. ஆரம்பப் பள்ளி களில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இல வசமாக கல்வி கற்று தரப்படு கிறது.

இதற்கிடையே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படிக்கும் மாண வர்களுக்கான கல்விக் கட் டணம் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங் கோட்டையன், சட்டப்பேரவையில் கடந்த ஜூலை 2-ம் தேதி அறி வித்தார். தொடர்ந்து அதற்கான அரசாணையை தமிழக அரசு இப்போது வெளியிட்டுள்ளது.

தேர்வுகளை எதிர்கொள்ள..

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறப் பட்டுள்ளதாவது: தேசிய அள விலான பல்வேறு போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங் கில வழிக்கல்வியில் படிக்கும் மாணவர்களின் கல்விக்கட்ட ணத்தை ரத்து செய்ய வேண்டு மென பள்ளிக்கல்வி இயக்குநர் அரசுக்கு பரிந்துரை செய்தார்.

இதை நன்கு பரிசீலனை செய்து தமிழக அரசு ஒப்புதல் அளித்துள் ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டு முதல் 6 முதல் 12-ம் வகுப்பு வரை (ஆங்கில வழி) கல்விக்கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், 2019-20-ம் கல்வி ஆண்டில் ஆங்கில வழிக்கல்வியில் பயிலும் 22,314 மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கல்விக்கட்டணம் ரூ.67 லட்சமும் திரும்ப ஒப்படைக்கப் படும்.

இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT