சென்னை
தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘தென்மேற்கு பருவகாலம் 50% முடிவடைந்த நிலையில் தமிழக அணைகளில் 20%-க்கும் குறைவாகவே நீர் உள்ளது என்பது வேதனைச் செய்தி!
அதிமுக அரசு டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்க வரப்போகும் சிக்கல், மழை பற்றாக்குறையை சமாளிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வலியுறுத்துகிறேன்’’ எனக் கூறியுள்ளார்.
மேலும் தமிழக அணைகளில் தென்மேற்கு பருவமழை சீசனில் சேரும் தண்ணீரில் 20 சதவீதத்துக்கும் குறைவான அளவு மட்டுமே இருப்பதாக வெளியான செய்தியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இணைத்துள்ளார்.