பொங்கல் உணவில் இருந்ததாக கூறப்படும் புழு. 
தமிழகம்

தண்டராம்பட்டு விடுதியில் வழங்கப்பட்ட பொங்கலில் புழு: மாணவர்கள் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தண்டராம்பட்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் வழங்கப்பட்ட காலை உணவான பொங்கலில் புழு இருந்ததாக மாண வர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் 50 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். அவர்களுக்கு நேற்று காலை பொங்கல் உணவு வழங்கப்பட்டுள்ளது. அதில், புழு இருந்ததாக கூறி, உணவை உட்கொள்ள மாணவர்கள் மறுத்து விட்டனர். மேலும் சமைத்து வைக்கப்பட்டிருந்த பொங்கலை, கால்நடைகளுக்கு கொட்டிவிட்டு பள்ளிக்கு சென்றுவிட்டனர்.

இது குறித்து மாணவர்கள் கூறும் போது, “விடுதியில் எங்களுக்கு தரமான உணவு வழங்கவில்லை. பல நேரங்களில் சாப்பிடாமல் சென்றுவிடுகிறோம். எங்களுக்கு இன்று (நேற்று) வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்தன. இதனால், நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து விடுதி காப்பாளர் அந்தோணிராஜை தொடர்பு கொண்டு கேட்டபோது, “50 மாணவர் களுக்கும் உணவு அட்டவணைப்படி சமைத்து உணவு வழங்குகிறோம். ரேஷன் அரிசி மூலம் உணவு தயாரிக்கப்படுகிறது. அதில் வண்டுகள் இருந்தாலும், அதனை சுத்தம் செய்தே சமையலர் சமைக் கிறார். இந்நிலையில் இன்று (நேற்று) சமைத்த உணவில் புழு இருந்ததாக மாணவர்கள் கூறு கின்றனர். அவ்வாறு இருக்க வாய்ப்பு இல்லை. நாங்கள், தரமான உணவை வழங்கவே பணியில் உள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT