தமிழகம்

ஜெயலலிதா மரணத்தில் எதையோ மறைக்க அப்போலோ மருத்துவமனை முயற்சிக்கிறது: உச்ச நீதிமன்றத்தில் ஆணையம் பதில் மனு

செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எதையோ மறைக்க அப்போலோ மருத்துவமனை முயற்சிக்கிறது என உச்ச நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயல லிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறு முகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்தும், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குறித்தும் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக அப்போலோ மருத்துவ மனை நிர்வாகம் உச்ச நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், ஆறுமுகசாமி ஆணையத் தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்நிலை யில் இந்த வழக்கு தொடர்பாக ஆறுமுகசாமி ஆணை யம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், “ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் எதையோ மறைக்க முயற்சிக்கிறது.

ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரியதில் உள்நோக்கம் உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் சரியான கோணத்தில்தான் விசாரணை நடத்தியது.

எனவே ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்” என்று கோரியுள்ளது.

SCROLL FOR NEXT