கோப்புப் படம் 
தமிழகம்

மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும்  டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம்: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் வழக்கம்போல் செயல்படும்

செய்திப்பிரிவு

தேசிய மருத்துவ ஆணையத் துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள டாக்டர்கள் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 24 மணி நேரம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்திய மருத்துவக் கவுன் சிலுக்கு (எம்சிஐ) பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை (என்எம்சி) மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இது மருத்துவத் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற் படுத்தும் எனக்கூறி இந்த ஆணை யத்துக்கு நாடுமுழுவதும் அரசி யல் கட்சியினர், டாக்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர். பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் இது தொடர்பான மசோதா மாநிலங் களவையில் நிறைவேறியது.

தேசிய மருத்துவ ஆணையத் துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ கம் உள்ளிட்ட நாடுமுழுவதும் டாக்டர்கள், மருத்துவ மாண வர்கள் தர்ணா, ஆர்ப்பாட்டம் உள் ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை யில் தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் நாடுமுழுவதும் இன்று காலை 6 மணி முதல் நாளை (ஆக. 1-ம் தேதி) காலை 6 மணி வரை 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

இதனால், தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகள், புறநோயாளி கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் அரசு டாக்டர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற் காமல் ஆதரவு மட்டும் தெரிவிப் பதால் அரசு மருத்துவமனைகள் வழக்கம்போல் செயல்படும்.

இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழகத் தலைவர் எஸ்.கனகசபாபதி கூறிய தாவது:

தேசிய மருத்துவ ஆணையம் கொண்டுவருவதற்கு அனைத்து தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப் பினும், மத்திய அரசு ஆணையத் துக்கான மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. இந்த ஆணையம் கொண்டு வரப்பட் டால் மருத்துவத் துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படும்.

அதனால், இந்த ஆணையத் துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் 31-ம் தேதி காலை 6 மணி முதல் ஆக.1-ம் தேதி காலை 6 மணி வரை 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை இந்திய மருத்துவச் சங்கம் அறி வித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தப் போராட் டத்தில் தமிழகத்தில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பணியாற் றும் சுமார் 1 லட்சம் டாக்டர்கள் பங் கேற்பார்கள். நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சைகளில் டாக்டர்கள் பணியாற்றுவார்கள். புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் நிறுத் தப்படும். மருத்துவமாணவர்கள் வகுப்புகளை புறக்கணிக்கின்ற னர். இவ்வாறு அவர் கூறினார்

SCROLL FOR NEXT