எம்.சரவணன்
காஞ்சி அத்திவரதர் தரிசனத்தின் போது, தகுதியற்ற பலரையும் விஐபிக்களாகக் கருதி மேற்கொள் ளப்படும் சிறப்பு மரியாதையைக் கண்டு உண்மையான பக்தர்கள் வேதனைப்படுகின்றனர். விஐபி அந்தஸ்து தருவதில் சில வரை யறைகளை மாவட்ட நிர்வாகம் கடைபிடிக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.
முக்கிய பிரமுகர்கள்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா, திமுக எம்.பி. கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலரும் விஐபி அந்தஸ் துடன் வந்து, அத்திரவரதரை தரிசித்து விட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அதிகமான குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரை ரவுடி வரிச்சியூர் செல்வம் விஐபி அந்தஸ்துடன் அத்திவரதரை தரிசனம் செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. விஐபி பாஸ் கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு திமுக எம்.பி.க்கள் எழுதிய கடிதமும் வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
முகம் தெரிந்தவர்கள் என்ற அடிப்படையில் பிரபலம் இல்லாத திரைத்துறையினரையும்கூட விஐபி அந்தஸ்தில் அனுமதிப் பது, சமூக வலைதளங்களில் விமர் சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
மேலும், சிலருக்கு சால்வை அணிவித்து அர்ச்சகர்கள் கவுரவம் செய்வது போன்ற வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால், கால்கடுக்க பல மணி நேரம் காத்திருந்து அத்தி வரதரை தரிசிக்கும் பக்தர்கள் பெரும் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அர்ச்சகர்களின் நடவடிக்கைகளும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன.
விஐபி பாஸ்
இதுதொடர்பாக இந்து முன்ன ணியின் மாநில அமைப்பாளர் க.பக்த வத்சலத்திடம் கேட்டபோது, ‘‘அத்திவரதர் விழா தொடங்குவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே தினமும் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக பக்தர் கள் வருவார்கள். எனவே, அதற்கேற்ப பந்தல், குடிநீர், கழிப்பறை, உணவு, சக்கர நாற்காலி, ஆம்புலன்ஸ், மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மனு அளித்தோம். ஆனால், அவ்வளவு பேர் வரமாட் டார்கள் என்று அலட்சியமாக இருந்து விட்டனர்.
விஐபி பாஸ் வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. அது தவிர்க்க முடியாதது. ஆனால், வரைமுறை இல்லாமல் வாரி வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். எதைச் செய்தாலும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் செய்ய வேண்டும்’’ என்றார்.
வியாபார கண்ணோட்டத்துடன்...
இந்து தமிழர் கட்சியின் தலை வர் ராம.ரவிக்குமாரிடம் கேட்ட போது, ‘‘அனைத்தையும் வியாபார கண்ணோட்டத்துடன் அணுகுவது கண்டனத்துக்குரியது. திருப்பதி யில் விஐபி பாஸ் பெற்று வந்தா லும், குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அனைவரும் ஒரே வரிசைக்கு வந்து தான் தரிசிக்க முடியும். ஆனால், அத்திவரதரை தரிசிக்க விஐபி களுக்கு முற்றிலும் தனி வழி வைத்துள்ளனர். அது சாமானிய பக்தர்களின் தரிசன நேரத்தைக் கூடுதலாக்கி விடுகிறது’’ என்றார்.
செல்போனில் படம் எடுக்க தடை
உண்மையாகவே, விஐபி, விவிஐபி, நன்கொடையாளர் பாஸ் பெறத் தகுதியானவர்கள் யார் என்பதை வரையறை செய்து, அதன் அடிப்படையில் பாஸ்கள் வழங் கப்பட வேண்டும்.
அர்ச்சகர்கள் சால்வை அணி விப்பது, மாலை அணிவிப்பது போன்றவற்றை செல்போன்களில் படம் எடுப்பதை தடை செய்ய வேண்டும். உண்மையான பக்தர் கள் அத்திவரதரை விரைந்து தரிசிக் கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.