ரயில்வே நிர்வாகம் அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:
ரயில்வே துறையில் 55 வயது கடந்த ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிப்பதாகவும், இதன்மூலம் ஆட்குறைப்பு மேற்கொள்வதாகவும் செய்தி வெளியானது. இது முற்றிலும் தவறான தகவல். ரயில்வே ஊழியர்கள் 55 வயது கடந்திருந் தாலோ, 30 வருடம் பணியாற்றி இருந்தாலோ அவர்களது பணித் திறனை ஆய்வு செய்வது ஒரு வழக்கமான நடவடிக்கை ஆகும். ரயில்வே பணியாளர்விதிமுறை களின் அடிப்படையிலும், பொது நலன் கருதியும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.