ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த நடிகர் கருணாஸ் எம்எல்ஏ. 
தமிழகம்

ஓராண்டாக தொகுதிப் பக்கமே தலைகாட்டாதது ஏன்? - நடிகர் கருணாஸ் எம்எல்ஏ புது விளக்கம்

செய்திப்பிரிவு

அதிகாரிகள் ஒத்துழைப்புதராதது, மக்களின் எதிர்ப்பால் ஓராண்டாக தொகுதிப் பக்கம் வராமல் இருந் தேன் என திருவாடானை தொகுதி எம்எல்ஏவும், நடிகருமான கரு ணாஸ் தெரிவித்தார்.

தனது தொகுதியின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் ஆட்சியரை சந்தித்து கருணாஸ் எம்எல்ஏ மனு அளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடிமராமத்து திட்டத்தில் திருவாடானையில் 22 கண்மாய்களில் பணிகள் நடக்கின்றன. சில இடங்களில் கமிஷன் கேட்பதாக புகார் வந்தது. யாருடைய தலையீடும் இல்லாமல், கமிஷன் இன்றி இப்பணிகளை விவசாயிகளே செய்ய வேண்டும். திருவாடானை தொகுதியில் 5,000 பேருக்கு வங்கிக் கடனுதவி செய்து தருவதாக ஆட்சியர் கூறினார்.

அதிகாரிகள் ஒத்துழைப்பு தராதது, சில இடங்களில் மக்கள் எதிர்ப்பால் ஓராண்டாக என்னால் தொகுதி பக்கம் வர முடியவில்லை. நான் ஒரு சமுதாயத் தலைவன். தொகுதியில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட நான் விரும்பவில்லை.

இருப்பினும் மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். எனது தொகுதி பணிகளில், யாருடைய தலையீடும் இருக்காது என முதல்வர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு கரு ணாஸ் கூறினார்.

SCROLL FOR NEXT