நாட்டரசன்கோட்டை அருகே மேலக்காடு பகுதியில் சம்பங்கி பறிக்கும் விவசாயிகள். 
தமிழகம்

நாட்டரசன்கோட்டை அருகே வறண்ட நிலத்தில் சம்பங்கி விளைச்சல்: இயற்கை முறையில் சாதித்த மதுரை விவசாயி

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டை அருகே வறண்ட நிலத் தில் இயற்கை முறையில் சம்பங்கி சாகுபடி மூலம் சாதித்து வருகிறார் மதுரை விவசாயி ஒருவர்.

சிவகங்கையில் மழை பொய்த் ததால் பல லட்சம் பரப்பில் நிலங் கள் தரிசாக விடப்பட்டுள்ளன. ஆனால், ஒரு சிலர் மட்டும் சொந்த முயற்சியால் பயிர்களை விளை வித்து வருகின்றனர்.

மதுரையைச் சேர்ந்த விவசாயி பால. கார்த்திகேயன், நாட்டரசன் கோட்டை அருகே மேலக்காடு பகுதியில் 4 ஏக்கரில் இயற்கை முறையில் சம்பங்கி சாகுபடி செய்துள்ளார். இதற்காக சொட்டுநீர் பாசன முறையிலும் ஸ்பிரிங்லர் மூலமும் தண்ணீர் பாய்ச்சி வரு கிறார்.

பொதுவாக, கோடை காலத்தில் சம்பங்கி மகசூல் குறையும். ஆனால், சொட்டுநீர் மூலம் அடியிலும், ஸ்பிரிங்லர் மூலம் மேற்பரப்பிலும் தண்ணீர் கிடைத்ததால் மகசூலும் குறை யவில்லை. இதுகுறித்து பால.கார்த்தி கேயன் கூறியதாவது: இயற்கை முறையில் சாகுபடி செய்வதற்காக எனக்கு ஆட்சியர் விருது வழங்கினார். சம்பங்கியை பொறுத்தவரை ஏக்கருக்கு 800 கிலோ கிழங்கு வாங்கி விதைத்தேன். ஒரு கிலோ ரூ. 50-க்கு வாங்கினேன். முன்னதாக, சாணம், தென்னை நார் கலந்து 10 டன் அடியுரம் இட்டேன்.

சொட்டுநீர் பாசனம் இருந் தாலும், வெயிலின் தாக்கத்தால் செடிகள் கருகின. இதை தடுக்க 15 அடிக்கு ஒரு ஸ்பிரிங்லர் வீதம் 700 ஸ்பிரிங்லர் வைத்தேன். அதிகபட்சம் தினமும் 300 கிலோ மகசூல் கிடைத்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

இவரது தோட்டத்தை ஆய்வு செய்த மலேசியா புத்ரா பல் கலை. ஆய்வு மாணவர் ஏ. ஜெக தீஸ்வரன் கூறுகையில், ரசாயன உர பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், இயற்கை முறையில் சம்பங்கியை விளைவித்தது வியப்பாக உள்ளது என்றார்.

- இ. ஜெகநாதன

SCROLL FOR NEXT