கலாம் மறைவு அவர் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பேரிழப்பாகும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை. அவர் இழப்பு அவர் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பேரிழப்பாகும்.
கலாமின் இறுதிச்சடங்கு தமிழகத்திலேயே நடத்த வேண்டுமென்று தமிழக மக்களின் சார்பாக மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.