அணைக்கட்டு
ஜெயலலிதா கொண்டு வந்த எந்த திட்டமும் நிறுத்தப்படாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் அதிமுக கூட்டணி வேட் பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அணைக்கட்டு பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒடுக்கத் தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அதை நாங்கள் தற் போது தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். இதை பொருத்துக் கொள்ள முடியாத திமுகவினர் பொய் பரப்புரைகளை செய்து வருகின்றனர். ஒரு கட்சியை நடத்தக் கூடிய தலைவராக இருக்கின்ற ஸ்டாலின் பொய்யான தகவல்களையும், வாக்குறுதிகளை யும் கொடுத்து பெற்ற வெற்றிதான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி.
தமிழகத்தில் எண்ணற்ற திட்டங் களை கொண்டு வந்தது அதிமுக அரசு. குடிசை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற 6 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.
ஜெ. ஆட்சியில் கல்வி புரட்சி
கல்வியில் புரட்சி ஏற்பட்டது ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தான். 16 வகையான கல்வி உப கரணங்களை வழங்கி, மாணவர் களின் உயர்கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டவர் ஜெயலலிதா. அதே போல், பெண்களுக்கு ஏராளமான உதவிகளை அதிமுக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அதில், தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும் என திமுகவினர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். புதுக் கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வறட்சி காரணமாக 100 நாள் வேலை திட்டம், 150 நாள் வேலை திட்டமாக செயல்படுத்தப்படுகின்றன. எந்தக் காலத்திலும் 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படாது என இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.
100 நாள் வேலை திட்டம் மட்டும் அல்ல, மறைந்த முதல்வர் ஜெய லலிதா கொண்டு வந்த எந்த திட்ட மும் நிறுத்தப்படாது. பொங்கல் பரிசாக பச்சரிசி, கரும்புடன் ரூ.1,000 வழங்கியது அதிமுக அரசு. இது போன்ற நல்ல திட்டங்களுக்கு திமுக வினர் நீதிமன்றத்தை நாடி அதற்கு தடையாணை வாங்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் ஆச்சர்யம்
ஏழை, எளிய மக்களின் நல் வாழ்வுக்காக எண்ணற்ற திட்டங்களை வழங்கிய அதிமுக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஏன் தோற்றது என்பதே தெரிய வில்லை. அதிமுகவுக்கு வாக்கு அளித்தவர்கள் கூட தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து விட்டதா என ஆச்சரியப்படுகின்ற னர்.
இது தமிழகம் மட்டும் அல்ல. நாடு முழுவதும் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியது. அதற்கு பிராயச்சித்தமாக வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக வுக்கு வாக்களிக்க வேண்டும்.
தமிழக அரசியல் வரலாற்றில் சட்டப்பேரவை அல்லது மக்களவைத் தேர்தலிலோ அதிமுக தோல்வியடைந்தால், அடுத்த வரும் தேர்தல்களில் அதிமுக மாபெரும் வெற்றி பெறுவது வழக் கம் என்றார்.