கோப்புப்படம் 
தமிழகம்

அத்திவரதர் தரிசனத்தில் பக்தர்களுக்கு ராணுவ பாதுகாப்பு கோரிய வழக்குகள் தள்ளுபடி

செய்திப்பிரிவு

சென்னை

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு துணை ராணுவப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும். மூடப்பட்டுள்ள வரதராஜப் பெருமாள் கோயில் மூலவர் சந்நிதியை திறக்க வேண்டும்.

நீண்டநேரமாக காத்திருக்க நேரிடுவதால் முதியவர்கள், பெண் ள், குழந்தைகளுக்கு குளிர்சாதன வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத் துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கோயிலைச் சுற்றி வசிக்கும் குடியிருப்புவாசிகளின் வாகனங்களை அனுமதிக்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர் ரமேஷ், சேலம் ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு களைத் தொடர்ந்து இருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர் வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் பக்தர்களின் வசதிக் காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளுக்கான விரிவான ஏற்பாடுகள் குறித்து விளக்கப்பட்டன.

மேலும் அத்திவரதரே தற்போது மூலவர் என்பதால் மூலவர் சந்நிதி மூடப்பட்டுள்ளது எனவும், விஐபிக் கள், நன்கொடையாளர்களால் பொதுதரிசனம் செய்யும் பக்தர்க ளுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று நீதிபதி கள், அத்திரவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு துணை ராணு வப்படை பாதுகாப்பு கோரியது உள்ளிட்ட 6 வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT