29-ம் நாளான நேற்று அத்திவரதர் இளஞ்சிவப்பு நிறப் பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
தமிழகம்

அத்திவரதரை நின்ற கோலத்தில் மாற்றும் பணிகளுக்காக நாளை மட்டும் மாலை 5 மணிக்கு மேல் தரிசனம் இல்லை: காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்

வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்க உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளுக்காக நாளை மட்டும் மாலை 5 மணிக்கு மேல் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வருகிறது. 29-ம் நாளான நேற்று அத்திவரதர் இளஞ்சிவப்பு நிறப் பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சயனக்கோலம் நாளையுடன் நிறைவடைய உள்ளதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க குவிந்தனர். பொதுதரிசனத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நெரிசலை தடுக்க பல்வேறு இடங்களில் தடுப்புகளை ஏற்படுத்தி போலீஸார் மக்களை வரிசையில் அனுப்பினர்.

மாவட்ட ஆட்சியர் பொன்னையா இந்த விழா தொடர்பாக நேற்று கூறியதாவது:

தமிழக முதல்வர் அறிவித்தது போல் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்க உள்ளார். நாளை மாலை 5 மணி வரை மட்டுமே பொதுமக்கள் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படு
வார்கள். கிழக்கு கோபுர வாசல் நண்பகல் 12 மணிக்கே மூடப்படும். அதற்குள் கோயிலுக்குள் வந்தவர்கள் மட்டுமே மாலை 5 மணிவரை தரிசிக்க முடியும். முக்கிய பிரமுகர்களுக்கான அனுமதி அட்டை வைத்துள்ளவர்கள் 12 மணி வரை மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.

அதன் பின்னர் 3 மணி வரை ஆன்-லைன் மூலம் பதிவு செய்தவர்கள் தரிசிக்கலாம். மிக முக்கிய பிரமுகர்கள் 3 மணிக்கு மேல் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதன் பின்னர் அத்திவரதரை நின்ற கோலத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற உள்ளதால் தரிசனம் 5 மணியுடன் முடிவடைகிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி காலை 5 மணியில் இருந்து எப்போதும் போல் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்கலாம்.

ஆகஸ்ட் 3-ம் தேதி  ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. பிற்பகல் 3 மணிக்கு கோபுர கதவு அடைக்கப்பட்டு கோயில் உள்ளே வந்தவர்கள் 5 மணிவரை  தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். திருக்கல்யாண வைபவம் முடிந்த பின்னர் இரவு 8 மணியில் இருந்து மீண்டும் சுவாமியை பக்தர்கள் தரிசிக்கலாம்.

அதேபோல் ஆகஸ்ட் 15-ம் தேதி ஆடி கருடசேவை உற்சவம் நடைபெற உள்ளது. அன்றும் மாலை 5 மணிக்கு மேல் அத்திவரதரை தரிசிக்க அனுமதி கிடையாது. ஏற்கெனவே 2 ஐ.ஜி.க்கள், 3 டி.ஐ.ஜி.க்கள், 16 காவல் கண்
காணிப்பாளர்கள், 5,100 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் நாட்களில் மேலும் 3 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட உள்ளனர். வரிசையில் வரும் மக்கள் ஓய்
வெடுத்துவிட்டு மீண்டும் வரிசையில் செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.

SCROLL FOR NEXT