நடிகர் சங்க உறுப்பினர்கள் 61 பேர் தொடர்பான ஆவணங்களை பதிவாளரிடம் ஒப்படைக்கும் சங்கத் தலைவர் நாசர், பாண்டவர் அணி ஒருங்கிணைப்பாளர் பூச்சி முருகன் உள்ளிட்டோர். 
தமிழகம்

நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம்; உறுப்பினர் நீக்கம் தொடர்பான ஆவணங்கள் ஒப்படைப்பு:  சங்கப் பதிவாளரிடம் பாண்டவர் அணியினர் வழங்கினர்

செய்திப்பிரிவு

சென்னை

நடிகர் சங்க உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான ஆவணங்களை சங்கங்களின் பதிவாளரிடம் பாண்டவர் அணியினர் நேற்று ஒப்படைத்தனர்.

2019 - 22 ஆண்டுக்கான நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்தது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன.

முன்னதாக, நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட 61 பேர், இத்தேர்தலை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மாவட்ட சங்க பதிவாளரிடமும் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், தேர்தலை ரத்து செய்து பதிவாளர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து பாண்டவர் அணியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, திட்டமிட்டபடி ஜூன் 23-ம் தேதி தேர்தல் நடத்த தடை இல்லை என்று கூறிய உயர் நீதிமன்றம், வாக்கு எண்ணிக் கையை நிறுத்திவைக்க உத்தர விட்டது. இந்த வழக்கு வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையில், நடிகர் சங்கத் தில் தொழில்முறை உறுப்பினர் களில் இருந்து தொழில்முறை யற்ற உறுப்பினர்களாக மாற்றப் பட்ட 61 பேரின் முழு ஆவணங் களையும் ஒப்படைக்குமாறு நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு மாவட்ட பதிவாளர் சங்கம் கடிதம் அனுப்பியது.

இந்நிலையில், அது சம்பந்த மான ஆவணங்களை நடிகர் சங்கத் தலைவர் நாசர், பூச்சிமுருகன் உள்ளிட்டோர் பதி வாளரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

இதுபற்றி பாண்டவர் அணி யின் ஒருங்கிணைப்பாளர் பூச்சி முருகன் கூறியபோது, ‘‘எந்த உறுப்பினரையும் நாங்கள் நீக்கவில்லை. நடிகர் சங்கத் தின் செயற்குழு கூட்டங்களுக்கு பலமுறை அழைத்தும் சில உறுப்பினர்கள் வரவில்லை. அவர்களது உறுப்பினர் சேர்க் கையிலும் குளறுபடி இருந்தது. இதனால், தொழில்முறை உறுப்பினர்கள் என்ற பட்டியலில் இருந்தவர்களை தொழில்முறை யற்ற கலைஞர்கள் என்ற பட்டிய லுக்குள் கொண்டு வந்தோம். அதற்குரிய முறையான கடிதங்களை ஏற்கெனவே கொடுத்துள்ளோம். பதிவாளர் தரப்பில் கேட்ட படி, முழு ஆவணங்களையும் ஒப்படைத்துள்ளோம். ஆளும் கட்சியினர் ஏன் இதில் இவ் வளவு கவனம் செலுத்துகிறார் கள் என்பது தெரியவில்லை’’ என்றார்.

இதுபற்றி நாசரிடம் கேட்ட போது, ‘‘பதிவாளர் தரப்பில் கேட்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சரியாக வகைப்படுத்தி அளித்துள்ளோம். வழக்கு விசாரணையில் இருப்பதால் விரிவாக பேச வேண்டாம்’’ என்றார்.

SCROLL FOR NEXT