சென்னை
சட்டவிரோத பேனர்கள் தொடர் பாக உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் தலைமை செயலர் ஆஜராக நேரிடும் என உயர் நீதி மன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
சட்டவிரோத பேனர்களைக் கட்டுப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு களை செயல்படுத்தவில்லை எனக் கூறி தமிழக அரசுக்கு எதிராக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை காணொலி காட்சி மூலம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இருந்து நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், பி.புகழேந்தி ஆகி யோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது டிராஃபிக் ராமசாமி தரப்பில், ‘‘பூந்தமல்லி அதிமுக முன்னாள் கவுன்சிலர் இல்ல திருமண விழாவில் பங்கேற்கச் சென்ற முதல்வர் மற்றும் துணை முதல்வரை வரவேற்று கோயம் பேடு முதல் பூந்தமல்லி வரை போலீஸ் பாதுகாப்புடன் சட்ட விரோத பேனர்கள் வைக்கப்பட் டன’’ என்று குற்றம்சாட்டப்பட்டது.
அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ‘‘சட்டவிரோத பேனர் களைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை எடுத்து வரு கிறோம் என தலைமை செயலாளர் ஏற்கெனவே 2 முறை அறிக்கை தாக்கல் செய்துள்ளார். ஆனாலும் இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சட்ட விரோத பேனர்களைத் தடுக்க இனியும் உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் தலைமை செயலரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்’’ என எச்சரித்தனர். மேலும் இதுதொடர்பாக தலைமை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஆக.7-க்கு தள்ளி வைத்தனர்.