தமிழகம்

புதிய கல்விக்கொள்கையில் தொலைதூரக் கல்வி முறை கருத்தரங்கம்; தேசிய வரைவு கல்விக் கொள்கையில் பல சிறப்பு அம்சங்கள்: தமிழ்நாடு சட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாராட்டு

செய்திப்பிரிவு

சென்னை

மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய வரைவு கல்விக் கொள்கையில் வரவேற்கத்தக்க பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்று சென்னையில் நடந்த கருத்தரங்கில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டிஎஸ்என் சாஸ்திரி பாராட்டியுள்ளார்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் தேசிய கல்விக்கொள்கை வரைவை வெளியிட்டு அதுதொடர்பாக பொது மக்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு சார்பிலும், அந்தந்த மாநில அரசு கள் சார்பிலும் கருத்து கேட்புக் கூட்டங்கள், பொது விவாத கருத் தரங்குகள் நடத்தப்பட்டு வருகின் றன. கருத்துகளை தெரிவிப்ப தற்கான காலக்கெடு ஆகஸ்ட் 15-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பில் புதிய கல்விக்கொள்கை யில் தொலைதூரக்கல்வி முறை தொடர்பான கருத்தரங்கம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத் துவ பல்கலைக்கழகத் துணைவேந் தர் சுதா சேஷையன், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல் கலைக்கழகத் துணைவேந்தர் டிஎஸ்என் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல் கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர் கே.பன்னீர்செல் வம், சென்னை ஐஐடி பேராசிரி யர்கள் மங்களா சுந்தர் கிருஷ்ணன், ஆண்ட்ரூ தங்கராஜ், புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர்கள் எஸ்.அருள்செல்வன், மும்தாஜ் பேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் அவர்கள் பேசியதாவது:

துணைவேந்தர் கே.பார்த்த சாரதி: இந்தியாவில் 15 திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றில் 12 பல்கலைக்கழகங்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு படிப்புகளை வழங்கு கின்றன. தேசிய அளவில் உயர் கல்வி செல்வோரின் எண்ணிக்கை 11 சதவீதமாக அதிகரித்திருப் பதில் திறந்தநிலை பல்கலைக்கழ கங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

இந்தியாவிலேயே தமிழ்நாட் டில்தான் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகம். அரசு பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 63 பல்கலைக்கழகங்களில் செயல் பட்டு வருகின்றன.

30 சதவீதமாக உயர்த்த இலக்கு

63 பல்கலைக்கழகங்களில் 12 பல்கலைக் கழகங்கள் தொலை தூரக் கல்வி வாயிலாக பல்வேறு படிப்புகளை வழங்கி வருகின்றன. மத்திய அரசு உயர்கல்வி செல் வோரின் எண்ணிக்கையை 2020-ல் 30 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. வாழ்நாள் முழு வதும் கற்பதற்கு தொலைதூரக் கல்வித் திட்டம் பெரிதும் உதவி கரமாக இருக்கும்.

துணைவேந்தர் சுதா சேஷை யன்: விரும்பும்போது படிப்பதற்கு, தேர்வெழுதுவதற்கு வசதியாக இருப்பது தொலைதூரக் கல்வி முறை. அதற்கு வயது ஒரு பொருட்டே அல்ல. எந்த வயதினராக இருந்தா லும் தொலைதூரக் கல்வித் திட்டத்தில் சேர்ந்து படிக்கலாம். உயர்கல்வி வளர்ச்சியில் தொலைதூரக் கல்வி முக்கிய பங்கு வகிக்க முடியும். தொழில்சார் படிப்புகளில் பட்ட மேற்படிப்பை தொலைதூரக் கல்வி வாயிலாக வழங்க முடியும்.

பெரிதும் பயனளிக்கும்

அந்த வகையில், மருத்துவக் கல்வியில் பட்டமேற்படிப்பு அள வில் தொலைதூரக் கல்வி முறையைக் கொண்டுவரலாம். எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற டாக்டர் தனது மருத்துவ அறிவை மேம் படுத்துவதற்கு அது பெரிதும் பய னுள்ளதாக இருக்கும்.

மருத்துவம் சார்ந்த அடிப்படை அறிவை அவர் எம்பிபிஎஸ் படிப்பில் பெற்றிருப் பார். தொலைதூரக் கல்வியில் தரத்தை உறுதிசெய்வது மிகவும் அவசியம்” என்றார்.

டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள்

துணைவேந்தர் டிஎஸ்என் சாஸ் திரி: புதிய கல்விக் கொள்கையில் தொலைதூரக் கல்வி முறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை. இந்தியா வில் 800-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் உள்ளன. அவற்றில் 500 பல்கலைக்கழகங்கள் அரசு பல்கலைக்கழகங்கள் ஆகும். தொலைதூரக் கல்வி முறையில் சட்டப் படிப்பை வழங்க முடியுமா என்ற கேள்வி எழலாம்.

அறிவுசார் சொத்துரிமை

சட்ட அறிவு ஊட்டி பொதுமக் களை அதிகாரமிக்கவர்களாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர் களாகவும் ஆக்க, சட்டப் படிப்பை சார்நிலை சட்டப் படிப்புகளாக வழங்க முடியும். அந்த வகையில், இணையச் சட்டம், அறிவுசார் சொத்துரிமை, சுற்றுலா சட்டம், சுற்றுச்சூழல் சட்டம் போன்ற சார்ந்த துணை நிலை படிப்புகளில் டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளை தொலைதூரக் கல்வியில் கொண்டு வந்தால் பலரும் பயனடைவர், இவ்வாறு அவர்கள் பேசினர்.

முன்னதாக, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பதிவாளர் கு.தியாகராஜன் வரவேற்றார். கருத்தரங்க அமைப்புச் செயலாளர் டி.ரவிமாணிக்கம் நோக்கவுரை ஆற் றினார்.

கருத்தரங்க தொடக்க விழா முடிவடைந்த பின்னர் சட்ட பல் கலைக்கழகத் துணைவேந்தர் டிஎஸ்என் சாஸ்திரி செய்தியாளர் களிடம் கூறும்போது, "மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய வரைவு கல்விக் கொள்கையில் வரவேற்கத் தக்க பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதேநேரத்தில் இந்தியா, கூட்டாட்சி நடைமுறை கொண்ட நாடு.

எனவே, அனைத்து மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுடன் விரிவாக கலந்து ஆலோசித்து அதன் பின்னரே புதிய கல்விக் கொள் கையை இறுதிசெய்ய வேண்டும். இதற்கு கூடுதல் காலஅவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.

சிறு சிறு திருத்தங்கள்

தேசிய கல்விக் கொள்கை என்பது ஒரு வரைவுக் கொள்கையை உருவாக்கிக் கொண்டு அதன்பிறகு அதில் சிறு சிறு திருத்தங்கள் செய்து நடைமுறைப்படுத்தக்கூடிய ஒன்றல்ல.

புதிய கல்விக்கொள்கையின் இலக்கு தெளிவாக உள்ளது. ஆனால், அதில் அனைத்து மாநிலங் களின் நலன்களும் கருத்தில் கொள் ளப்பட வேண்டும். ஒரேநாளில் 28 மாநில கல்வி அமைச்சர்களுடன் ஆலோசித்து கல்விக் கொள் கையை இறுதிசெய்துவிட முடி யாது. விரிவாக ஆலோசனை நடத்தி இறுதிசெய்ய வேண்டும்" என்றார்.

தமிழ்நாடு திறந்தநிலை பல் கலைக்கழகத் துணைவேந்தர் பார்த்தசாரதி கூறும்போது, "புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள தொலைதூரக் கல்வி தொடர்பாக கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் கல்வியாளர்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. தற்போது சென்னையில் மீண்டும் வல்லுநர்களுடன் ஆலோசனை செய்கிறோம்.

கல்விக் கொள்கை தொடர்பான எங்களின் கருத்துகள், பரிந்துரை கள், செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஓரிரு நாளில் அறிக்கையாக அனுப்புவோம்" என்றார்.
 

SCROLL FOR NEXT