கோப்புப்படம் 
தமிழகம்

அப்ரன்டீஸ் பயிற்சி: ஆக.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

சென்னை

மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோ மொபைல் இன்ஜினீயரிங் படித்த வர்கள் ஓராண்டு கால அப்ரன் டீஸ் பயிற்சிக்கு ஆகஸ்ட் 12-ம் தேதி வரை ஆன்லை னில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறை அறிவித் துள்ளது.

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையும் மத்திய அரசின் தென்மண்டல தொழிற் பழகுநர் பயிற்சி வாரியமும் இணைந்து ஓராண்டு கால தொழில்பழகுநர் பயிற்சியை (அப்ரன்டீஸ் பயிற்சி) அளிக்க உள்ளன.

இந்த பயிற்சியில், மெக்கானிக் கல் மற்றும் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங்கில் பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு (டிப்ளமா) முடித்தவர்கள் சேர தகுதியுடையவர் ஆவர். இப் படிப்புகளில் 2017, 2018, 2019-ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள் www.boat-srp.com என்ற இணைய தளத்தை பயன்படுத்தி ஆகஸ்டு 12-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்த தகவலை தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறை இயக்குநர் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT