சென்னை
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் மழை பெய்து வருவதால், கோயம்பேடு சந்தைக்கு காய்கறி கள் வரத்து அதிகரித்து, அவற்றின் விலை குறையத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு களாக போதிய அளவு பருவமழை பொழியவில்லை. மேலும் கடந்த 6 மாதங்களில் கோடை மழை கூட குறைவாகவே பெய்தது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இதே நிலை நீடித்தது.
இதன் காரணமாக காய்கறிகள் விளைச்சல் குறைந்து, கோயம் பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்தது. அதன் விளை வாக கடந்த 3 மாதங்களாக காய்கறிகளின் விலை உச்சத்தில் இருந்தது.
தக்காளி, கத்தரிக்காய் தலா கிலோ ரூ.50, பீன்ஸ் ரூ.100, அவரைக்காய் ரூ.80, பச்சை மிளகாய், சாம்பார் வெங்காயம் தலா ரூ.60, கேரட் ரூ.45 என விற்கப்பட்டு வந்தது. சில்லறை விற்பனை சந்தைகளில் இவற்றின் விலை மேலும் அதிகரித்தது.
வெப்பச் சலனம்
இந்நிலையில் தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழம் மற்றும் அண்டை மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக ஓரளவு மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக காய்கறி விளைச் சல் அதிகரித்து, கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரித்துள் ளது. இதனால் காய்கறி விலை குறையத் தொடங்கியுள்ளது.
கடந்த வாரம் கிலோ ரூ.45 வரை விற்கப்பட்டு வந்த தக்காளி நேற்று ரூ.30 ஆகவும், பீன்ஸ் ரூ.70-லிருந்து ரூ.60 ஆகவும், பாகற்காய் ரூ.50-லிருந்து ரூ.35 ஆகவும் விலை குறைந்துள்ளது.
மேலும் வெங்காயம் கிலோ ரூ.21, சாம்பார் வெங்காயம் ரூ.55, கத்தரிக்காய் ரூ.15, உருளைக் கிழங்கு ரூ.16, அவரைக் காய் ரூ.50, வெண்டைக்காய், புடலங்காய், பச்சை மிளகாய் தலா ரூ.20 , முருங்கைக்காய் ரூ.38, முள்ளங்கி ரூ.15, முட்டைக்கோஸ் ரூ.18, கேரட் ரூ.45, பீட்ரூட் ரூ.30 என விலை குறைந்துள்ளது.
இது தொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகள் கூறும்போது, "பரவலாக மழை பெய்து வருவதால், சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்துள் ளது. அதனால் விலை குறைந்து வருகிறது. அடுத்த மாதம் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது" என்றனர்.