சென்னை
மாநகரின் குடிநீர் தேவையை 70 நாட்களுக்கு பூர்த்தி செய்யும் அளவுக்கு இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழைக் காலத்தில் சென்னையில் 247 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மூலம் மழைநீரை சேமிக்க மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத் தில் வடகிழக்கு பருவமழை குறைந் ததாலும், கோடை மழை பெய்யாத தாலும் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இருப்பினும் மாநகர குடிநீர் தட்டுப்பாடு தீர்க்கப்படவில்லை. இந்நிலையில் மாநகராட்சி நிர்வாக மும், சென்னை குடிநீர் வாரியமும், கடந்த 2004-ம் ஆண்டு செயல்படுத் தப்பட்டு கவனிக்கப்படாமல் இருந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்துக்கு புத்துயிர் அளித்து வருகின்றன.
இதனிடையே இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் கடந்த ஜூன் 25-ம் தேதி முதல் சென்னையில் மழை பெய்து வரு கிறது. ஜூலை 27-ம் தேதி நிலவரப் படி சென்னையில் (விரிவாக்கத் துக்கு முந்தைய) சராசரியாக 247 மிமீ மழை பெய்துள்ளது. இந்த காலகட் டத்தில் வழக்கமாக 159 மிமீ மழை பெய்யும். இந்த ஆண்டு 56 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் தமிழக அளவில் திருவண்ணாமலை மற்றும் சென்னை மாவட்டத்தில்தான் அதிக மழை கிடைத்துள்ளது. திரு வண்ணாமலை மாவட்டத்தில் 251 மிமீ மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தை விட 81 சதவீதம் அதிகமாகும்.
விரிவாக்கத்துக்கு முந்தைய சென்னையின் பரப்பு 174 சதுர கிமீ (42 ஆயிரத்து 978 ஏக்கர்) கொண் டது. ஒரு ஏக்கரில் 25.4 மிமீ மழை பெய்தால், 1 லட்சம் லிட்டர் நீர் கிடைக் கும். 42 ஆயிரத்து 978 ஏக்கரில், 247 மிமீ மழை பெய்தால் 3 ஆயிரத்து 868 கோடி லிட்டர் நீர் (38 ஆயிரத்து 680 மில்லியன் லிட்டர்) கிடைக்கும். விரிவாக்கப்பட்ட மாநக ரின் ஒரு நாள் குடிநீர் தேவை 830 மில்லியன் லிட்டர். எனவே தற்போது பெய்துள்ள மழை, மாநகரின் 46 நாள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். கோடை காலத்தில் விநியோகிக்கப்படும் 550 மில்லியன் லிட்டர் அளவு எனில் 70 நாள் தேவையை பூர்த்தி செய்யும்.
இந்நிலையில் மழைநீரை சேமிக்க எடுக்கப்பட்டு வரும் நட வடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மழைநீரை சேமிக்கும் விதமாக, அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த மாநகராட்சி அறிவுறுத்தி வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்ய 200 வார்டுகளிலும் தலா ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டிலும் தலா 1000 மழைநீர் சேக ரிப்பு கட்டமைப்பு என மொத்தம் 2 லட்சம் புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்த இலக்கு நிர்ணயித்திருக் கிறோம்.
இதுவரை 1 லட்சத்து 42 ஆயிரத்து 396 கட்டிடங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் 1 லட்சத்து 1121 கட்டிடங்களில் மழைநீர் கட்டமைப்புகள் ஏற்கெ னவே இருப்பதும், 41 ஆயிரத்து 275 கட்டிடங்களில் மழைநீர் சேக ரிப்பு கட்டமைப்புகள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. அங்கு மழைநீர் கட்டமைப்பு களை உடனடியாக அமைக்க ஆலோ சனைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் மாநகராட்சி கட்டிடங்கள் அனைத்திலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருப்பதை உறுதி செய்தி வருகிறோம். சென்னையில் 210 ஏரிகள், குளங்கள் உள்ளன. அவற்றை புனரமைக்கும் பணி களும் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் மழைநீர் வீணாக வெளி யேறுவது தடுக்கப்படும் என்றனர்.
- ச.கார்த்திகேயன்