இ.ஜெகநாதன்
சிவகங்கையில் ரூ.60 லட்சத்துக்கு மேல் மின்திருட்டில் ஈடுபட்ட 45 தொழில் அதிபர்களை மின்வாரியம் ஆன்லைன் மூலம் கையும் களவுமாகப் பிடித்தது.
தமிழகத்தில் மின்திருட்டைத் தடுக்க 17 அமலாக்கக் குழுக்கள், ஒரு புலனாய்வுக் குழு, முன்னாள் ராணுவ வீரர்களைக் கொண்ட 43 குழுக்கள் உள்ளன. ஒரு பறக்கும் படையும் உள்ளது. அவர்கள் மின்திருட்டில் ஈடுபடுவோரைக் கண்காணித்து அபராதம் விதித்து வருகின்றனர்.
இருந்தபோதிலும் மின்திருட்டு குறையவில்லை. 2018-19-ல் மட்டும் 15,467 மின் திருட்டுகள் கண்டுபி டிக்கப் பட்டு ரூ.55 கோடி அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் சிவகங்கை பகுதியில் சில தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்களில் குறைவான மின்கட்டணமே செலுத்தி வந்தனர். சந்தேகமடைந்த பறக்கும் படையினர் ஆன்லைன் மூலம் மின் பயன்பாட்டைக் கண்காணித்தனர். இதில் மின்திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது.
இதையடுத்து உதவிச் செயற் பொறியாளர் உதுமான்அலி தலைமை யிலான பறக்கும் படையினர் சிவகங்கை, மதகுபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்களில் திடீர் சோதனை நடத்தினர். இதில் மீட்டரில் ஓட்டையிட்டு, மீட்டருக்கு மின்சாரம் செல்லாத வாறும், அவ்வப்போது இயங்கும் வகையிலும் வடிவமைக் கப்பட்டிருந்தன. இதன் மூலம் ரூ.60 லட்சம் மின்திருட்டில் ஈடுபட் டுள்ளனர். இது தொடர்பாக 45 தொழில் அதிபர்கள் கடந்த இரண்டு வாரங்களில் சிக்கியு ள்ளனர். அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக் கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் சிவகங்கை பகுதியைச் சேர்ந்த ஒருவர் தொழில் அதிபர்களைச் சந்தித்து மீட்டர்களை முடக்க ஏற்பாடு செய்துள்ளார். அவர் இதற்காக ஒவ்வொரு இணைப் புக்கும் ரூ.10 ஆயிரம் வாங்கி யுள்ளார். மின்வாரியத்தினர் பிடி இறுகியதால், அவர் வெளிநாடு தப்பியதாகக் கூறப்படு கிறது. இதுபோல் மாநிலம் முழுவதும் நடந்திருக்கலாம் என மின்வாரியத்தினர் சந்தேகிக்கின்றனர்.
மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், மின் பயன்பாடு அதிகம் இருந்த போதிலும், மின்கட்டணம் குறைவாக வந்ததால் சந்தேகம் அடைந்தோம். வணிக நிறுவனங்கள் மட்டுமின்றி, அவர்களது வீடுகள், உறவி னர்களின் வீடுகளிலும் மின்திருட்டு நடந்துள்ளது. அனைவரும் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டதால் போலீ ஸில் புகார் செய்யவில்லை. தொடர்ந்து மற்ற மின் இணைப்புகளையும் ஆன் லைன் மூலம் கண்காணிக் கிறோம் என்றார்