சாதி அடிப்படையில் தேர்தலில் வாக்களிக்கும் வரை தமிழர்கள் முன்னேற முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில், ‘முந்திரிக் காடு’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சீமான் பேசும் போது, சாதி அடையாளங்களை நாம் தமிழர் என்ற அடையாளம்தான் போக்கும் என்றார்.
அவர் மேலும் பேசும்போது, “பெருமை பேசுகின்ற போதெல்லாம் பெரியார் பூமி, அண்ணா பூமி, திராவிட பூமியெல்லாம் பேசுகிறீர்கள், திராவிடர்கள் நாங்கள்னு பேசுகிறீர்கள். சாதியப் படுகொலை நிகழும்போது எங்கே போனீர்கள் தமிழர்கள், எங்கே போனீர்கள் தமிழ் தமிழ் என்று பேசியவர்கள் என்று கேட்கிறார்கள்.
இது ஏன்? ஏன் ஒரு இந்தியனாக தலைகுனியக் கூடாது? ஏன் திராவிடர் தலைகுனிய முடியாது? தலைகுனியணும்னு பிரச்சினை வரும்போது தமிழ்ன் தலைகுனியணும். இது எப்படி?
பல ஆயிரம் ஆண்டுகளாக இந்தப் பிரச்சினை இருக்கிறது. சாதி இழிவை எதிர்த்துப் போராடாமல் இருப்பதை விட சாவதே மேல்” என்று பேசினார்.