உமாமகேஸ்வரியுடன் கொலை செய்யப்பட்ட அவரது பணிப்பெண் மாரியின் வீட்டுக்குச் சென்ற கனிமொழி, அவரது தாயார் வசந்தா மற்றும் மகள்களுக்கு ஆறுதல் கூறினார். படம்: மு.லெட்சுமி அருண் 
தமிழகம்

நெல்லையில் முன்னாள் மேயர் படுகொலை: குடும்பத்தினருக்கு கனிமொழி ஆறுதல் 

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாநகராட்சி முன் னாள் மேயர் உமா மகேஸ்வரி (65), அவரது கணவர் முருக சங்கரன் (74), அவர்களது வீட்டு பணிப்பெண் மாரி (37) ஆகியோரை, கடந்த 22-ம் தேதி மர்ம கும்பல் வீடு புகுந்து குத்திக் கொலை செய்து விட்டு, 20 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

இந்நிலையில், திமுக மகளிர ணிச் செயலாளர் கனிமொழி எம்பி, நேற்று உமா மகேஸ்வரியின் குடும் பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறியது: கொலை சம்பவத்துக்கு காரணமான யாரை யும் இன்னும் கைது செய்யாதது வருத்தத்தையும், கோபத்தையும் உருவாக்கி உள்ளது. மிக மோச மான வகையில் 3 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலைக்கு பின்புலம் என்ன? என்ற உண்மை இதுவரை மக்களுக்கு தெரியவில்லை. இது பெரிய அதிர்ச்சியை தருவதாக உள்ளது என்றார். பின்னர், கொலை செய்யப்பட்ட பணிப்பெண் மாரியம் மாள் வீட்டுக்குச் சென்று அவரது மகள்கள் மற்றும் தாயாருக்கு ஆறுதல் கூறினார்.

SCROLL FOR NEXT