தமிழகம்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் சார்பில் 69 பொருட்கள், 10 சேவைகளுக்கு வரி விலக்கு, குறைப்பு செய்ய பரிந்துரை: அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல் 

செய்திப்பிரிவு

தமிழகம் சார்பில் 69 பொருட்கள் மற்றும் 10 சேவைகளுக்கு வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு செய்ய வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சிலில் பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரி வித்தார்.

சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 36-வது கூட்டம் கடந்த 25-ம் தேதி நடப்ப தாக இருந்து பின்னர் தள்ளிவைக் கப்பட்டது. இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில், தலைமைச் செயலகத் தில் இருந்தபடியே காணொலிக் காட்சி மூலம் அமைச்சர் டி.ஜெயக் குமார், வணிக வரிகள் ஆணையர் டி.வி.சோமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் ஜெயக்குமார் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மின் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் எலெக்ட்ரிக் காருக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.

அதேபோல் பேட்டரி, சார்ஜருக் கான வரியும் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறி விப்பை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார். மின் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும்போது ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்களிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளளது.

இணக்கமுறை வரிசெலுத்து வோருக்கு ரூ.50 லட்சம் வரை சலுகை அளித்துள்ளோம். அவர் களுக்கு ஒரு மாதத்துக்கு கால நீட்டிப்பு வழங்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. இதற்கான அறிவிப் பையும் மத்திய அரசு வெளியிடும்.

ஏற்கெனவே, கோரிக்கைகள் அடிப்படையில், 381 பொருட்களில், 287 பொருட்களுக்கு வரி குறைக் கப்பட்டது. 21 பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. 39 சேவைகளுக்கு வரி குறைக்கப்பட் டது. 34 சேவைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது.

தமிழகத்தின் முன்மொழிவு அடிப்படையில் 30 பொருட்களுக் கும், 9 சேவைகளுக்கும் வரி குறைப்பும், வரி விலக்கும் அளிக்கப்பட்டது. தற்போது 69 பொருட்கள், 10 சேவைகளுக்கு வரி விலக்கு, வரி குறைப்புக்கு தமிழகம் சார்பில் பரிந்துரைத்துள்ளோம். இதற்கான ‘பிட்மென்ட்’ கமிட்டி அமைக்கப்பட்டு முடிவெடுக்கப் படும். இவ்வாறு அவர் தெரிவித் தார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

எலெக்ட்ரிக் கார்களின் சார்ஜர் களுக்கு வரி குறைக்கப்பட் டுள்ளதா?

ஏற்கெனவே சார்ஜர்களுக்கு 18-ல் இருந்து 12 சதவீதமாக குறைப்பதற்கு பரிந்துரைக்கப் பட்டிருந்தது. ஆனால், கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதிநிதிகள் வைத்த கோரிக்கை அடிப்படையில் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பேட்டரிக்கும் 5 சதவீதம்தான்.

சார்ஜ் செய்யும்போது அதற் கான மின் பயன்பாடு அதிகரிக் குமே?

ஒரு முறை சார்ஜ் செய்ய 40 யூனிட் ஆகும். அதற்கேற்ப மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். மாநிலத்தை பொறுத்தவரை மின் மிகை மாநிலமாக உள்ளது. அனைத்தையும் சமாளிக்கும் அளவுக்கு நமக்கு மின் திறன் உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதா?

இந்த கூட்டத்தை பொறுத்த வரை, இணக்கமுறை வரிசெலுத்து வோருக்கான காலக்கெடு நீட்டிப்பு, எலக்ட்ரிக் கார்களுக்கான வரி குறைப்பு உள்ளிட்டவை குறித்து, விவாதிக்கப்பட்டது. மாற்றுத்திற னாளிகள் உபகரணம் என்பது 69 பொருட்களில் வருகிறது. அடுத் தடுத்த கூட்டங்களில் தீர்வு காணப் படும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்

SCROLL FOR NEXT