தமிழகம்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு: தமிழகம், புதுச்சேரியில் மழை குறைய வாய்ப்பு

செய்திப்பிரிவு

வங்கக் கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில தினங்களுக்கு மழை குறைய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறியதாவது:

தமிழகத்தில் வளிமண்டலத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரண மாக கடந்த சில தினங்களாக நல்ல மழை கிடைத்தது. இரு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப் படுகிறது.

2 காற்றழுத்த தாழ்வுகள்

தற்போது வடமேற்கு வங்கக் கடலில், மேற்குவங்க மாநிலம் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அது ஒடிஷா மாநிலத்தை நோக்கி நகரக்கூடும். 31-ம் தேதி வாக்கில் அதே பகுதியில் மற்றொரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக தமிழகத் தில் காற்று வீசும் திசை மாறக் கூடும் என எதிர்பார்க்கப்படு கிறது.

தற்போது தென்மேற்கு திசை யில் இருந்து காற்று வீசி வரு கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் தெற்கில் இருந்து காற்று வீச வாய்ப்புள்ளது. இத னால் தமிழகம் மற்றும் புதுச் சேரியில் அடுத்த சில தினங்களுக்கு மழை வாய்ப்பு குறையக்கூடும். ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 6 செமீ, அவலாஞ்சி, மேல் பவானி, நடுவட்டம் ஆகிய இடங்களில் தலா 3 செமீ, கூடலூர் பாலம் பகுதியில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு ந.புவியரசன் கூறினார்.

SCROLL FOR NEXT