சதுரகிரி மலைக்குச் செல்லும் பக்தர்கள். 
தமிழகம்

ஆடி அமாவாசை திருவிழா: சதுரகிரியில் 3 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் - அன்னதானக் கூடங்கள் மூடப்பட்டதால் பக்தர்கள் தவிப்பு

செய்திப்பிரிவு

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தண்ணீர் பற் றாக்குறையால் மலையில் இயங்கி வந்த அன்னதானக்கூடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பலர் பசியோடு திரும்பினர். சதுரகிரி மலைக்குச் சென்ற பக்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

விருதுநகர்-மதுரை மாவட்ட எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. இங்கு ஆடி அமாவாசை திருவிழா வரும் 31-ம் தேதி நடைபெறுகிறது.

அதையொட்டி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக சதுரகிரி மலைக்குச் செல்ல நேற்று முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை வனத் துறை அனுமதி அளித்துள்ளது. விடு முறை தினம் என்பதால் நேற்று ஒரே நாளில் சுமார் 3 ஆயிரம் பக்தர்கள் சதுரகிரி மலையில் சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வசதிக்காக விருது நகர், திருவில்லிபுத்தூர், ராஜ பாளையம், அருப்புக்கோட்டை, மதுரை, திருமங்கலம், பேரையூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தாணிப்பாறையில் உள்ள வனத் துறை நுழைவு வாயிலில் பக்தர்களின் உடைமைகள் வனத் துறையினரால் சோதனை செய்யப் பட்டன. பிளாஸ்டிக் பைகள், தீப்பெட்டி, சிகரெட், புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன.

பக்தர்கள் வசதிக்காக வனப் பகுதியில் 5 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு பக்தர் களுக்கு குடிநீர் விநியோகம் செய் யப்பட்டது. மலையில் முடி காணிக்கை செலுத்தத் தடை விதிக் கப்பட்டதால் பக்தர்கள் பலர் அடி வாரப் பகுதியான தாணிப்பாறை யிலேயே முடி காணிக்கை செலுத்திவிட்டு மலையேறினர்.

வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் மலையில் சன்னிதானம் பகுதியில் இயங்கி வந்த 7 அன்னதானக் கூடங்களுக் குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பக்தர்களுக்கு சுடு கஞ்சியும், ஊறுகாயும் வழங்கப்பட்டன. அன்னதானம் கிடைக்கா ததால் பக்தர்கள் பலர் பசியோடு திரும்பினர்.

மேலும் நடக்க முடியாத பக் தர்களின் வசதிக்காக டோலி வசதி செய்யப்பட்டுள்ளது. மலை யேறி இறங்க ஒருவருக்கு ரூ.3 ஆயிரம் வரை டோலிக்காக வசூலிக்கப்படுகிறது.

பக்தர் உயிரிழப்பு

சதுரகிரி மலையில் துர்க்கை யம்மன் கோயில் அருகே மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர்(50) என்கிற பக்தர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் டோலி மூலம் அடிவாரப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டது.

இது குறித்து சாப்டூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீவிர கண்காணிப்பு

இதற்கிடையே பக்தர்கள் போர் வையில் தீவிரவாதிகள், நக்சலைட் கள் ஊடுருவதைத் தடுக்க விருதுநகர் மாவட்ட நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையிலான போலீஸார் இயந்திரத் துப்பாக்கிகளுடன் சதுரகிரி மலைப் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT