தமிழகம்

ஹெச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விருதுநகர் பெண்ணின் குழந்தைக்கு தொற்று இல்லை: 2-ம் கட்ட பரிசோதனை முடிவில் அறிவிப்பு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

ஹெச்ஐவி தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட சாத்தூரைச் சேர்ந்த பெண்ணின் குழந்தைக்கு 2-ஆம் கட்ட ரத்தப் பரிசோதனையின் முடிவில் ஹெச்ஐவி கிருமி தொற்று இல்லை என மதுரை அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு, டிசம்பர் 26-ம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு பரிசோதிக்கப்படாத நிலையில் ஹெச்ஐவி தொற்று கொண்ட ரத்தம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு எய்ட்ஸ் இல்லை என முதற்கட்டப் பரிசோதனையில் உறுதியளிக்கப்பட்டது. 

இந்நிலையில், 6 மாத கால இடைவெளிக்குப் பின்னர் 2-ம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் குழந்தைக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இத்தகவலை மதுரை அரசு மருத்துவமனை டீன் வனிதா உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, நேற்று (ஜூலை 26) பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 25 லட்ச ரூபாயை தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT