தமிழகம்

கைலாஷ் - மானசரோவர் புனித யாத்திரை செல்ல இந்துக்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி 

கைலாஷ் - மானசரோவர் புனித யாத்திரை செல்லும் இந்துக்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப் படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று செய்தியாளர் களிடம் அவர் கூறியது:

புதுச்சேரியில் அனைத்து மத மக்களும் சமமாக பார்க்கப்படுகின்ற னர். புதுச்சேரியில் மதம், இனத்தின் பெயரால் பாகுபாடு வரக்கூடாது என்பதற்காக ஹஜ் புனிதப் பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கு நிதியுதவி வழங்குவதைப் போல், கைலாஷ்-மானசரோவர் புனித யாத்திரை செல்லும் இந்துக்களுக் கும் நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹஜ் யாத்திரைக்கான நிதி உதவியை மத்திய அரசு நிறுத்தி விட்டாலும், புதுச்சேரி அரசு வழங்கி வருகிறது.

கைலாஷ்-மானசரோவருக்கு புனித யாத்திரை செல்லும் இந்துக் கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். இதனால் முதல் வர் நிவாரண நிதியில் இருந்து கைலாஷ் - மானசரோவருக்கு புனித யாத்திரை செல்லும் இந்துக்கள் ஒவ் வொருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT