பரோலில் வந்துள்ள நளினி நேற்று சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார். படம் : வி.எம்.மணிநாதன். 
தமிழகம்

வேலூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட நளினி 

செய்திப்பிரிவு

வேலூர் 

மகளின் திருமணத்துக்காக ஒரு மாதம் பரோலில் வந்துள்ள நளினி, சிறைத்துறை விதிகளின் படி சத்துவாச்சாரி காவல் நிலை யத்தில் நேற்று கையெழுத்திட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, தனது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாட்டுக்காக ஒரு மாதம் பரோலில் வந்துள்ளார். வேலூர் ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவையின் மாநில துணை பொதுச் செயலாளர் சிங்கராயர் வீட்டில் தங்கியுள்ள அவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நளினி மகளின் திருமண ஏற்பாட்டுக்காக வந்துள்ளதால் ஊடகங்களிடம் பேசக்கூடாது, விழாக்களில் பங்கேற்கக்கூடாது, அரசியல் பிரமுகர்களை சந்திக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 12 நிபந்தனைகள் சிறைத் துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ளன. நளினி பரோலில் வந்துள்ளதால் அவர் தினமும் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் கையெழுத் திட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

அதன்படி, முதல் நாளான நேற்று காலை காவல் துறை பாதுகாப்புடன் சத்துவாச்சாரி காவல் நிலையத்துக்கு நளினி சென்றார். அங்கு ஆய்வாளர் அழகுராணி முன்னிலையில் கையெழுத்திட்ட பிறகு, பாது காப்புடன் அழைத்துச் செல்லப் பட்டார்.

SCROLL FOR NEXT